இதுவரை இல்லாத அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டம் தழுவியதால்,தங்களது ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாத சம்பளத்தை வழங்க வேண்டிய தேதியிலிருந்து பத்து நாட்கள் கடந்தும் வழங்க வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

jio தொலைதொடர்பு நிறுவனம் வருகைக்கு பின்,இந்தியாவில் பெரும் புரட்சியே வந்துவிட்டது என்று கூறலாம்.காரணம் குறைந்த தொகையில் சாதாரண பாமர மக்கள் கூட இன்று கையில் போன் வைத்துக்கொண்டு, உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிய முடிகிறது என்றால் பாருங்களேன். இதற்கெல்லாம் காரணம் jio.

அதே வேளையில் jio வருகைக்கு பின் மற்ற தொலைதொர்பு நிறுவனங்கள் பெரும் அளவில் பாதிப்பு அடைந்தது, போட்டியை சமாளிக்க முடியாமலும், jio விற்கு இணையாக இலவச சேவை மற்றும் குறைந்த விலையில் சலுகையை  வாரி வழங்குவது என சில மாதங்கள் தாக்கு பிடித்தாலும் கால போக்கில் பெரும் நஷ்டத்தையே தழுவியது. உதாரணம் ஏர்செல் நிறுவனம் கம்பெனியை சாத்தியே விட்டது...

இப்போது, பிஎஸ்என் எல் கூட அந்த வகையில் பாதித்து உள்ளது என்றால் பாருங்களேன். கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது.1.70லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவன ஒட்டு மொத்த ஊழியர்களின் மாத சம்பள தொகை 1200 கோடி. அதாவது, நிறுவனத்திற்கு கிடைக்கக் கூடிய தொகையில் 55  சதவீதம் வெறும்  சம்பளத்திற்கு மட்டுமே ஒவ்வொரு மாதமும் செலவிடப்படுகிறது.மேலும் ஒவ்வொரு ஆண்டும் 8 சதவீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் வருமானம் இல்லை. இப்படியே சென்றால் சம்பளம் எப்படி வழங்க முடியுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் All Unions and Associations of BSNL (AUAB), தோலைதொடர்பு அமைச்சகத்திற்கு நிலைமையை எடுத்துரைத்து கடிதம் எழுதி உள்ளது. எவ்வளவு விரைவில் நிதி ஒதுக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என்பதே ... 

இதற்கிடையில் தற்போது தான் கேரளா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலத்தில் மட்டும் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.