ஜியோவை கலங்க வைத்த "அபினந்தன் ரூ.151" திட்டம்..! 

ஜியோவிற்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது. அதாவது அபினந்தன் ரூபாய் 151 என்ற திட்டத்தின் கீழ் அற்புத சலுகையை வழங்கியுள்ளது பிஎஸ்என்எல்.

இதன் மூலம் எல்லையற்ற போன் கால்ஸ், தினமும் 1 ஜிபி அளவில் டேட்டா, 100 sms என 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இதில் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்து தினமும் ஒரு ஜிபி அளவிலான டேட்டாவிற்கு பதிலாக 1.5 ஜி பி டேட்டா வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது பிஎஸ்என்எல். இதனால் வாடிக்கையாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிஎஸ்என்எல் இன் இந்த அற்புத திட்டத்திற்கு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர காரணமே ஜியோ தான். காரணம்... ரூபாய் 149 இல், வழங்கப்படும் ஜியோவின் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். 28 நாட்கள் கால அவகாசத்களுடன் கிடைக்கப் பெறுவதால் ஜியோ வாடிக்கையாளர்கள் பெருமளவு இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த திட்டத்திற்கு போட்டியாக வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது இந்த சலுகையை வாரி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.