ஜியோ நிறுவனம் இலவச டேட்டா வழங்கிய நாள் முதலே மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு தலைவலி தொடங்கி விட்டது என்றே கூறலாம்.

காரணம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு டேட்டா இலவசம், இலவச வாய்ஸ் கால்ஸ் என்றால் சும்மாவா..? மற்ற  நிறுவன வாடிக்கையாளர்கள் கூட ஜியோ சிம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்த நிலைமையை சமாளிக்க மற்ற  நிறுவனங்களும் இலவச டேட்டா மற்றும் பல சலுகைகளை அறிவித்து இருந்தது.
 
அதன் விளைவாக ஏர்செல் நிறுவனம் கதவை சாத்தி சென்றது தான் மிச்சம். இதனையும் தாண்டி வோடபோன் உள்ளிட்ட சில நிறுவனங்கள்  வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்து உள்ளது.

அதன் படி, 

பிஎஸ்என்எல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.599 கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து உள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 180 நாளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

இதில் டேட்டா குறித்த சலுகை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் வாய்ஸ் கால்ஸ் சலுகை மூலம் வாடிக்கையாளர்களை பயன்பெற முடியும். மேலும் இந்த சலுகை மூலம்  வாடிக்கையாளர்கள் மற்ற சேவைக்கு மாறுவதை தவிர்க்க பிஎஸ்என்எல் எடுத்துள்ள அதிரடி திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.