பொங்கலை முன்னிட்டு அதிரடி..! 

இந்தியாமுழுக்க மற்ற தொலைபேசி நெட்வொர்க்க்கிற்கும் இலவசமாக பேசக்கூடிய அதிவேக தோலைபேசி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கி உள்ளது.

அதன்படி, மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு  இணையாகவும், பெரும் சவாலாகவும் இருக்ககூடிய பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. இந்த நிலையில், அனைத்து தொலைப்பேசி நெட்வொர்க்க்கிற்கும் இலவசமாக தொடர்பு கொள்ளும் வகையில் அதிவேக தொலைப்பேசி சேவையை தொடங்கப்பட்டு உள்ளது என பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் திரு.வெங்கட்ராமன் செய்தியாளர் சந்திப்பின் போது  தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது லோக்கல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் இணைந்து 100 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவையை வழங்கி வருவதாகவும், மேலும் மாதத்திற்கு 750  ஜிபி வரை டேட்டா பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும் , பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் ஒருவர் வெளியேறினால், 25 வாடிக்கையாளர்கள் அதே வேகத்தில் இணைகிறாரகள். அந்த அளவிற்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவையை விட, வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சேவை வழங்க இனி 24 மணி நேரமும் சேவை மையம் மும்முரமாக இயங்கும் எனவும் தெரிவித்து உள்ளார். பிஎஸ்என்எல் இந்த அதிரடி நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.