ஆடி சலுகை "பி.எஸ்.என்.எல்" அதிரடி அறிவிப்பு ..!  வருடம் முழுக்க ஃபிரீ..! 

வருடம் தோறும் ஆடி மாதம் என்றால் ஆடி சலுகை அறிவிப்பது வழக்கமான ஒன்று.. அதிலும் குறிப்பாக ஆடி சலுகையில் ஆடைகளை வாங்கி குவிக்கலாம் என பிரத்தயேகமாக அறிவிப்பார்கள். 

இதில் இந்த ஆண்டு ஒரு மாற்றமாக ஆடி சலுகையை அறிவித்து உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதன்படி 1188 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு வருடம் முழுக்க அன்லிமிடெட் கால் மற்றும்  தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு மருதம் திட்டம் எனவும் பெயரிட்டு உள்ளது. இது தவிர்த்து 1200 இலவச எஸ்எம் எஸ் வழங்கவும் உள்ளது. இந்த அரிய சலுகையை பெறுவதற்கு மிக குறுகிய காலம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.