தீவிர சிகிச்சை பிரிவில் "பிரிட்டன் பிரதமர்"..! உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் நடவடிக்கை!

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனில் உடல் நிலை மோசமடைந்து வருவதால், தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 

எந்த பாரபட்சமும், வயது வித்தியாசமும் இன்றி தாக்கும் கொரோனோவால் 200 கும் அதிகமான நாடுகள்  பெரும் பாதிப்பை அடைந்து உள்ளது. இதற்கெல்லாம் எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ என  உலக மக்கள் வேண்டி வருகின்றனர்.

மேலும் இதற்கான தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.உலகம் முழுவதும் இந்த நோயால் இதுவரை வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்திலும் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவால் இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் அடங்குவார். 55 வயதாகும் இவருக்கு கொரோனா பாதகிப்பு உள்ளதை கடந்த மாதமே உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவர்  தன்னை தானே 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும் வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாமல் இருந்ததால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் உலக மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.