Bride groom fight video: திருமணம் என்பது ''ஆயிரம் காலத்து பயிர்'' என்பதை, திருமண ஜோடி ஒன்று நிரூபித்து காட்டியுள்ளனர்.

இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படியாக உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. 

அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். அப்படியான ஒரு வேடிக்கையான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. 

பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் இருக்க வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.

இப்பேதெல்லாம் பல திருமணங்களை புரோகிதர்களுக்கு பதிலாக போட்டோகிராபர்களால்தான் நடத்துகிறார்கள் என சிலர் கிண்டலாகக் கூறுகிறார்கள்.தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண நாளை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள்.

இருப்பினும், தொன்று தொட்டு நம்முடைய பாரம்பரியத்தை கடைபிடிக்கும், திருமண தம்பதிகள் வீடியோ இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க...Dhanush post: ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் சேர்ந்திருக்கோம்...ரொம்ப சந்தோஷமா இருக்கு...தனுஷ் ஹாப்பியோ ஹாப்பி!

அந்த வீடியோவில், மண மக்கள் அனைத்து சடங்குகளையும் செய்கின்றனர். அப்போது, பானையில் பால், ரோஜா பூ கலந்த நீர் ஒரு பானையில் ஊற்றப்பட்டு அதில் ஒரு மோதிரத்தை போட்டு அதை தேடும் சடங்கும் நடக்கிறது. அதில் இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்கின்றனர். இந்த காட்சி, அருகில் உள்ள உறவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, அந்த காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

View post on Instagram