Breathing of mosquito smoke is equivalent to 100 cigarette

மலேரியா, "டெங்குபோன்ற நோய்கள் வரகொசுக்கள் காரணமாக உள்ளன. அவற்றை அழிப்பதுமுக்கியமே. ஆனால்அதற்காக நாம்வீடுகளில் பயன்படுத்தும்,கொசுவர்த்திச்சுருள்எலக்ட்ரானிக்லிக்குடேட்டர் போன்ற சாதனங்கள்நச்சுத் தன்மைகொண்டவை. அவை,கொசுக்களைமட்டும் அழிப்பதில்லைநம் நுரையீரலையும்பாதிக்கின்றன.

கொசுவர்த்தி சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்றசெயற்கையான வேதிப்பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த கொசுவர்த்தி சுருளை மணிக்கணக்காக அறைக்குள்எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூக்கிலும்கண்களிலும் நீர்

ஒழுகுதல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல்,நோய்த்தொற்று ஏற்படும். வறட்டு இருமல் அதிகமாக வரும்.‘சைனசைசிடிஸ்’ ஏற்பட்டு மூக்கு அடைத்துக்கொள்ளும். சில நேரம் மூக்கின் உள்ளே தொற்றுக்கிருமிகள் அதிகமாகி சீழ் கூட பிடிக்கலாம். இது போன்ற ஆரம்ப அறிகுறிகளின் போதே கவனிப்பது நல்லது.

கொசுவர்த்தி புகை நுரையீரலை அழற்சி அடையச் செய்துஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது. இதனால் சிலருக்கு‘ஆஸ்த் மாடிக் அட்டாக்’ கூட ஏற்படும். கொசுவர்த்தி புகையை சுவாசிப்பது என்பது நுாற்றுக் கணக்கான சிகரெட் குடிப்பதற்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சிலர் ஏசிசெய்யப்பட்ட அறையில் கொசுவர்த்தியை கொளுத்துவார்கள். இதனால் புகையானது அறையைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றும். தொடர்ந்து இதைசுவாசித்தால் நுரையீர லில் ஏற்படும் பாதிப்புகள் கேன்சராக கூட மாறலாம்.

கொசுவை விரட்டும் க்ரீம்களை தடவிக் கொள்வது கூட சிலருக்கு தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

இதனாலேயே, நம் குழந்தைகளுக்கும்நமக்கும்ஆஸ்துமா போன்ற பல பின்விளைவுகள்ஏற்படலாம்.

எனவே,கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாக்ககொசு வலைகள்உடலில் பூசிக் கொள்ளக் கூடிய கிரீம்கள் பயன்படுத்துவது நல்லது.

கொசுவர்த்திகளை தவிர்த்துவிட்டு கொசுவலைகளைஜன்னல்களில் அடிதுவிட்டலும் நல்லதே பின் உறங்கும் போது கொசுவலைகளை கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தாலும் நல்லதே!!