இதயத்திற்கு நல்லதாம் “கருப்பு சாக்லேட் “

பெரும்பாலும் சாக்லேட் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் என கூறினாலும்,

கருப்புநிற சாக்லேட் சாப்பிடுவதால், நமது இதயம் கூடுதல் ஆரோக்கியம் பெறுவதாக, சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு நடத்திய ஆய்வில், 1,139 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு நிறங்கள், ஃபிளேவர்களில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் உணவுப்பொருட்கள் தொடர்ச்சியாக, சில வாரங்களுக்கு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இதில், மற்ற சாக்லேட்டுகளை காட்டிலும், கருப்பு நிறத்திலான கோகுவா அதிகம் கலந்த சாக்லேட் சாப்பிடுவோருக்கு, இதயம் செயல்பாடு சீராகவும், இயல்பாகவும் உள்ளது, என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதய செயல்பாடு மிக சீராக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.