சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான எச். ராஜாவுக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் களத்தில் இறங்கி ஓட்டு சேகரிக்கும் பணியில் தீயாய் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான எச். ராஜாவுக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் களத்தில் இறங்கி ஓட்டு சேகரிக்கும் பணியில் தீயாய் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பொதுவாகவே மக்களிடையே ஓட்டு சேகரிக்க செல்லும் போது அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு பக்கம், யாரைப் பார்த்தாலும் கையெடுத்து கும்பிட்டு கண்டிப்பாக ஓட்டு போடுங்கள் என்ற வசனம், தேர்தலில் வெற்றி பெற்றால் இதையெல்லாம் செய்வேன் அதையெல்லாம் செய்வேன் என்ற வாக்குறுதி..இதுபோன்ற சில விஷயங்கள் தான் பிரபலம்.

ஆனால் ஓட்டு கேட்க போகும் போது மக்களிடம் அணுகும் முறை ஒன்று இருக்கும் அல்லவா? அந்த விஷயத்தில் பக்காவாக திட்டம் போட்டு செயலில் ஈடுபட்டு உள்ளது பாஜக இளைஞரணி.

பாஜக இளைஞர் அணி செயலாளரான பாண்டியன் தன் கையில் தாம்பூல தட்டுடன் தாமரை மலர்களையும் வெற்றிலை பாக்கையும் வைத்து வீடு வீடாக சென்று தெருத்தெருவாக சுற்றி மக்களிடம் தாமரை மலரை கொடுத்து, கண்டிப்பாக தாமரைக்கு வாக்களியுங்கள் என்று நம்பிக்கையுடன் வாக்கு சேகரித்து வருகிறார்.

மற்ற வேட்பாளர்கள் பிரச்சார உரையை தீவிர படுத்தினாலும் தமிழ் பண்பாடாகவும் தமிழ் மண்ணுக்கே உரித்தான கலாச்சாரத்தை கையிலெடுத்து பெரும் யுக்தியை செயலில் காட்டியுள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த சில புகைப்படங்கள் உங்களுக்காக....