பயோட்டின் சத்து நிறைந்த ஒரு லட்டு ரெசிபி, முடி உதிர்வை தடுத்து, முடி அடர்த்தியாக வளர வைப்பது மட்டுமின்றி, நம்முடைய மூளை, தோல், கண்கள், மூடி, நகங்கள், கல்லீரல், நரம்புமண்டலம் இவைகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பயோட்டின் சத்து நிறைந்த ஒரு லட்டு ரெசிபி, முடி உதிர்வை தடுத்து, முடி அடர்த்தியாக வளர வைப்பது மட்டுமின்றி, நம்முடைய மூளை, தோல், கண்கள், மூடி, நகங்கள், கல்லீரல், நரம்புமண்டலம் இவைகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பா கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்த பயோட்டின் ஊட்டச்சத்து மிகமிக அவசியம் தேவை. எலும்புகள் உறுதி பெற எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்க பயோட்டின் சத்து நிறைந்த பொருட்களை நாம் சாப்பிட வேண்டும்.

முட்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பாதாம் பருப்பு, பசுமையான கீரை வகைகள், பசும்பால், இவைகளில் பயோட்டின் சத்து நிறைந்துள்ளது. இது தவிர பயோடின் சத்து நிறைந்த விதைகளும் உள்ளது. அந்த விதைகளை வைத்து தினந்தோறும் நாம் சாப்பிடும் படியான சுவையான இனிப்பான லட்டுவை எப்படி செய்வது என தெரிஞ்சுக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு – 1/4 கப்,
வால்நட் – 1/4 கப்
சூரியகாந்தி விதை – 1/4 கப்,
முலாம்பழம் விதை – 1/4 கப்,
பூசணி விதை – 1/4 கப்,
ஆளி விதை – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்துருவல் – 1/4 கப் அளவு,
பேரிச்சம்பழம் – 4,
நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் – 1/4 கப்,
ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்,

செய்முறை:
1. ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் பாதாம் பருப்பு, வால்நட், சூரியகாந்தி விதை, முலாம்பழம் விதை, பூசணி விதை, ஆளி விதை, போன்றவற்றை 5 நிமிடம் மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.
2. வறுத்த பொருட்களை வேறொரு அகலமான பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த நட்ஸ் வகைகளிலும், விதைகளிலும் கூட பயோட்டின் சத்து மிக மிக அதிக அளவில் உள்ளது.
3. அடுத்தது ஒரு மிக்ஸி ஜாரில் ஆரிய இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.
4. பிறகு இதோடு தேங்காய்துருவல், பேரிச்சம்பழம், நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து கொள்ளவும்.
5. அரைத்த இந்த பொடியை ஒரு தட்டில் கொட்டி, கட்டிகளை உடைத்து விட்டு, உங்கள் கையை கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்தால் அழகான லட்டு நமக்கு கிடைத்துவிடும்.
இதை காற்று புகாத ஒரு கண்டைனர் பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் வரை கெட்டுப்போகாது. தினமும் ஒரு லட்டு சாப்பிட்டாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம்.

இரவு நேரத்தை தவிர்த்து, இதை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். ஏனெனில், இரவில் இது ஜீரணமாவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். இவை, உங்களுக்கு பயோட்டின் சத்து வழங்குவது நிச்சயம்.
ஆனால், நீங்கள் ஒரு சில உணவு பொருட்களையும் தவிர்ப்பது அவசியம். ஜங்க் ஃபுட் அறவே தவிர்க்க வேண்டிய ஒரு விஷயம். முறையை உடற்பயிற்சி அவசியம். மேலே, சொன்ன விஷயங்களை நீங்கள் பின்பற்றினால், உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பது நிச்சயம். ஒரு சில நாட்களிலேயே முடி உதிர்வு நிற்கும். கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்!
