இனி எல்லாம் பயோமெட்ரிக் தான்..! ஆசியர்களுக்கு கூட விதிவிலக்கு இல்லை..!

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் இது குறித்த சுற்றறிக்கையை கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ளார். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு பொருத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது 

இதுவரை பயோமெட்ரிக் பயன்படுத்தாத கல்லூரிகள் உடனடியாக பயோமெட்ரிக் பயன்படுத்த ஆயத்தம் செய்ய  வேண்டும் என்றும் வாரத்திற்கு ஒருமுறை வருகைப் பதிவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது