பில்லி சூன்யம் ஏவல் இது போன்ற வார்த்தைகளை நாம் பொதுவாகவே கேள்விபட்டிருப்போம். மேலும்  பில்லி சூன்யம் ஏவல் இதெல்லாம் ஒரு சில திரைப்படங்களில் சில காட்சிகளாக வைத்திருப்பார்கள்.

மாந்த்ரீகம் செய்து, ஒரு மனிதனை தன் வசம் வரவைப்பது பில்லி என சொல்லபடுகிறது.

இதே போன்று ஒரு மனிதனின் ஆடை அணிகலன்  முடி மற்றும் காலடி மண்  கொண்டு   சூனியம்   செய்யபடுவதாக   கூறப் படுகிறது .

இதே போன்று வசியம் செய்வது என கேள்விப்பட்டிருப்பீர்கள், பெண்ககளை ஆண்கள் தங்கள்   கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவும், பெண்கள் ஆண்களை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவும்   செய்யப்படுவதே வசியம் 

இதே போன்று, ஒருவர் விருபாத செயலை,அவரையே செய்ய தூண்டுவது ஏவல் என கூறப் படுகிறது . இதற்கு அடுத்தப்படியாக செய்வினை. இதன் மூலம் ஒருவர் அனைத்தையும் இழந்து அழிந்து போவது தான் செய்வினை என  கூறப்படுகிறது

வைத்தல்

மந்திரிக்கப்பட்ட ஒரு பொருளை கொண்டு, ஒருவரின் இருப்பிடத்தில் வைத்தால், அவர்களுக்கு  கெடுதல்   நடக்கும் என நம்பப்படுவது உண்டு .

இது போன்ற அனைத்தும் ஒரு  சிலர் நம்புவதும், தமக்கு பிடிக்காதவர்களுக்கு இது போன்று செய்து வைக்க வேண்டும் என சிலர் முற்படுவதையும் கேள்வி பட்டிருப்போம். இருந்தாலும்  இதெல்லாம் அனைவருக்கும் பலிக்கும் என்று கூற முடியாது.

அப்படியென்றால், யாருக்கெல்லாம் இது பலிக்காது என பார்க்கலாமா  ?

குரு ஆதிக்கம் நிறைந்தவர்கள்

வேதம் ஓதுபவர்கள்

யோகா தியானம் செய்பவர்கள்

குறிப்பாக காயத்ரி மந்திரம் சொல்பவர்கள்

ரத்தம் சொந்த அல்லாத மற்றவர்களின் வீட்டில் உண்ணாதவர்கள்

 குலதெய்வ வழிபாடு

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு

காமாட்சி வழிபாடு போன்ற வழிபாடுகளில் ஈடுபடுபவர்களை இந்த மாந்த்ரீகம் கொண்டு எதையும் செய்ய  முடியாதாம்