பல கிராமங்களுக்கு உயிர் நாடி.. இந்தியாவில் ஓடும் "கட்டணமில்லாத ரயில்" பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஒரு பார்வை!
Free Train in India : இந்திய அளவில் என்று சொல்வதை விட உலக அளவில் இந்தியாவில் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இலவச ரயில் தனது சேவையை அளித்து வருகின்றது.
ரயில் பயணங்களை விரும்பாதவர்களே இருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு, இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் ஒரு போக்குவரத்து என்றால் அது ரயில் வண்டிகள் தான். அனுதினமும் பல லட்சம் மக்கள் தங்களுடைய இலக்குகளை நோக்கி ரயில்களில் பயணித்து வருகின்றனர். அமர்ந்து மட்டும் செல்லும் 2 சீட்டர் வசதி தொடங்கி, முதல் வகுப்பு ஏசி வகுப்பு வரை நம்மால் பல வழிகளில் ரயிலில் பயணிக்க முடியும்.
குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து பல ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி நம்மால் சாதாரண ரயில்களில் இருந்து, சொகுசு ரயில்கள் வரை பயணிக்க முடியும். ஆனால் நமது இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக ஒரு ரயில் இலவசமாக செயல்பட்டு வருகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? உண்மையில் அப்படி ஒரு ரயில் இந்தியாவில் இயங்குகிறதா? என்று கேட்டால், செயல்படுகிறது என்று தான் கூறவேண்டும்
கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை.. 5 நாள் டூர் பேக்கேஜ்.. ரொம்ப கம்மி விலை தான் மக்களே..
பக்ரா நங்கல்
இந்தியாவில் 73 ஆண்டுகளாக இலவச பயணத்தை வழங்கி வருகின்றது இந்த பக்ரா நங்கல் ரயில். பக்ரா பியாஸ் மேலாண்மை ரயில்வே வாரியம் தான் இந்த ரயிலை இயக்குகின்றது. இது இந்தியாவின் இமாச்சல பிரதேச (பஞ்சாப்) எல்லையில் பக்ரா மற்றும் நங்கல் ஆகிய பகுதிகளுக்கு இடையே பயணிக்கிறது. இந்த ரயிலானது ஷிவாலிக் மலைத்தொடரில் வழியாக13 கிலோமீட்டர் பயணிக்கும் பொழுது அது சட்லஜ் நதிக்கரையை கடந்து தான் பயணிக்கின்றது.
ஆகவே அந்த இன்பமான காட்சியை மக்கள் இலவசமாக இந்த ரயிலில் பயணித்தவரே கண்டு களிக்கலாம். சுமார் 250 முதல் 300 பேர் ஒரு நாளைக்கு இந்த ரயிலில் பயணிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பக்ரா மற்றும் நங்கல் பகுதிகளுக்கு இடையே அமைந்திருக்கும் சுமார் 25 கிராமங்களுக்கு இந்த ரயில் நான் உயிர் நாடி என்றால் அது மிகையல்ல.
வெறும் 13 கிலோமீட்டர் தான் இந்த ரயில் பயணிக்கின்றது என்றாலும், அவ்வழியில் செல்லும் பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் செல்லும் பொழுது இந்த ரயிலில் ஏறும் சுற்றுலா பயணிகளும் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இன்னும் சொல்லப்போனால் இந்த ரயிலுக்கு என்று ஒரு தனியாக TTE (டிக்கெட் பரிசோதகர்) கிடையாது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த இலவச சேவையை நிறுத்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மக்கள் முன்வைத்த கோரிக்கைகளின் காரணமாக இன்று வரை இந்த இலவச ரயில் தனது பயணத்தை நிறுத்தாமல் ஓடுகிறது.
ஸ்வஸ்திக் வடிவவில் ஒரு அதிசய கிணறு! கேள்விப்பட்டு இருக்கீங்களா..? மிஸ் பண்ணாம போய் பாருங்க!