Motorcycles traveling long distances by car can be anyone want to admire the beauty of nature
என்னதான் விமானத்தில் பறந்தாலும் , இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு ஈடாகுமா ? கண்டிப்பா முடியாது . இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம் மேற்கொண்டு இயற்கையின் அழகை ரசிப்பதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது .
அந்த வரிசையில் தற்போது பைக் ரைடர்ஸ் செல்வதற்கு சில அழகிய பாதை கொண்ட , இயற்கை சூழ்ந்த சில இடங்கன் இருக்கின்றன.
மலைகளின் வசீகரம் காண ?
டெல்லியில் ஆரம்பித்து, பஞ்சாபிலிருந்து இமாச்சல பிரதேசம் வழியாக லடாக் என்ற இடத்தை சென்றடையலாம். இந்த வழியாக செல்லும் போது மலைகளின் அழகிய காட்சியை பார்க்க முடியும் .இவ்வாறு பயணம் செய்வதற்கு 12 நாட்கள் ஆகும்
மும்பை முதல் கோவா
மும்பை முதல் கோவா வரை பயணம் செய்ய 609 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது . மும்பையிலிருந்து கோவை செல்லும் போது , புனே வழியாக சென்றால் இயற்கையின் அழகை கண்கொள்ளா காட்சியாக ரசித்தவாறே செல்லலாம்.
