முகத்தில் மச்சம் போன்று தோன்றும் ஒரு விதமான  பரு நம் முக அழகை கெடுக்கும் விதமாக சில சமயத்தில் அமைந்து விடும். 

உங்கள் உடல் மட்டுமில்ல....முகத்திலும் மருவா..? இதோ ஒரே ஒரு தீர்வு..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முகத்தில் மச்சம் போன்று தோன்றும் ஒரு விதமான பரு நம் முக அழகை கெடுக்கும் விதமாக சில சமயத்தில் அமைந்து விடும். 

இதற்காக பலரும் பல சிகிச்சை எடுக்க மருத்துவமனை செல்கின்றனர். ஆனால் வீட்டில் இருந்தபடியே இதற்கான எளிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

ஆப்பிள் வினிகரை கொண்டு, மச்சம் உள்ள இடத்தில் காட்டனை கொண்டு தடவி விட்டு, சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தால், பின் அது தானாகவே விழுந்து விடும்.

பூண்டு பசை 

இதே போன்று பூண்டு பசியை கொண்டு, தினமும் அந்த மறு உள்ள இடத்தில் தடவி ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே விட வேண்டும். இவ்வாறு செய்தால், ஒரு வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும் 

காஸ்டர் ஆயில் ( ஆமணக்கு எண்ணெய்)

ஆமணக்கு எண்ணெய் உடன் ஒரு டேபிள் டீ ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து, ஒரு மாதம் அளவிற்கு தினமும் மரு இருந்த இடத்தில் தடவி வந்தால், விரைவில் மரு மறைந்து விடும்.

பைன் ஆப்பிள்

பைன் ஆப்பிள் சாறு உடன் கடல் உப்பை கலந்து, அதனை நல்ல ஸ்க்ரப் போன்று செய்து, தினமும் அந்த மரு மீது தடவி வர, அதில் உள்ள பேக்டீரியா வெளியேறி, விரைவில் மரு காணாமல் போகும்.

ஆலிவேரா


ஆலிவேரா தோலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டும் இல்லாமல் இது ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் என்பதால், மரு உள்ள இடத்தில் இதனை தடவி வர விரைவில் அது குணமாகும்.