பொதுவாகவே அனைவருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது தலைமுடி பிரச்சனை என்றே சொல்லலாம். மற்ற பிரச்சினைகளை விட தலை முடி உதிர்ந்தாலும் பளபளப்பு இல்லாமல் இருந்தாலோ மிகுந்த கவலை கொள்வோம் அல்லவா? இதற்கெல்லாம் தற்போது மிக சிறந்த தீர்வு என்ன என்பதை பார்க்கலாம். அதிக புரதம் நிறைந்துள்ள ஆலிவேரா ஜெல்லை பயன்படுத்தி தலை முடி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்

பொடுகு பிரச்னை என்றால், ஒரு கப் ஆலிவேரா ஜெல் எடுத்துக்கொண்டு, அதில் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து, பொடுகு உள்ள இடத்தில் தடவி வர பொடுகு தொல்லை வரவே வராது 

முடி பளபளப்பாக இருக்க வேண்டுமா..? 

ஆலி வேரா ஜெல்லுடன், கொஞ்சம் தயிர் சேர்த்து, சிறிதளவு தேனையும்  கலந்து, தலை முடி முழுவதும் தடவி 10  முதல் 15 நிமிடங்கள் அப்படியே உலர விடுங்கள். பின்னர் தலைக்கு குளித்தால் முடி பளபளப்பாக  இருக்கும் 

உறுதியான தலை முடிக்கு..!

முட்டையின்  வெள்ளைக்கருவுடன் ஆலி வேரா ஜெல் மற்றும் இஞ்சி சாறை கொஞ்சம் சேர்த்துக்கொள்ளவும். இவை மூன்றையும் நன்றாக  கலக்கி, தலை முடி முழுவதும் மசாஜ் செய்யவும். பின்னர் இரவு முழுக்க அப்படியே விட்டுவிட்டு காலை எழுந்தவுடன், இளம் வெந்நீரில்  குளித்தால் முடி உறுதியாக இருக்கும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இதே போன்று தலைமுடி வறட்சியை போக்க, ஆலிவேரா ஜெல்லுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேனை சேர்த்து நன்கு கலக்கி இதனை முடியில் தடவ வேண்டும். பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடு தண்ணீரில் நனைந்த டவலை எடுத்து பிழிந்து தலை முடியை சுற்றி வைக்க வேண்டும். பின்னர் பாருங்கள் தலைமுடி எந்த அளவிற்கு வறட்சி இல்லாமல் அழகாக உள்ளது என்று...