Monsoon Hair Care Tips : மழைக்காலத்தில் கூந்தலை இப்படி கேர் பண்ணுங்க.. முடி உதிர்வே இருக்காது!
Monsoon Hair Care Tips In Tamil : மழைக்காலத்தில் தலை முடியை பராமரிப்பது சற்று சவாலான காரியம். ஆனால், மழைக்காலத்தில் முடியை சரியாக கவனித்துக் கொண்டால் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
ஒவ்வொரு பெண்ணும் தனக்கு நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்று விரும்புகிறாள் ஆனால், மாறிவரும் பருவத்தில், குறிப்பாக, மழைக்காலத்தில் முடி தொடர்பான பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். அதிக ஈரப்பதம், மழை நீர் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் பிரச்சனைகளை மேலும் ஏற்படுத்தும் என்பதால், மழைக்காலத்தில் முடியை பராமரிப்பது சற்று சவாலானதாக இருக்கும். இன்னும் சிலர் பொடுகு மற்றும் உச்சம் தலையில் தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும், சரியான கவனிப்புடன் மழைக்காலத்தில் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். எனவே, மழைக்காலத்தில் முடியை பராமரிப்பது எப்படி என்று இப்போது இங்கு பார்க்கலாம்.
மழை காலத்தில் முடியை பராமரிக்க சில குறிப்புகள்:
1. தலை முடியை சுத்தமாக வைக்கவும்:
தூசி வியர்வை மற்றும் அதிகப்படியான எண்ணையை ஆகாச தலைக்கு அவ்வப்போது குளிக்கவும் உங்கள் தலைமுடி வகைக்கேற்ப லேசான ஷாம்புவை பயன்படுத்துங்கள் வெண்ணிற பயன்படுத்த வேண்டாம் ஏனெனில் இது உங்கள் தலை முடிவில் உள்ள இயற்கை எண்ணங்களை அகற்றி விடும்.
2. கண்டிஷனர் அவசியம்:
தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பிறகு நல்ல கண்டிஷனை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் தலைமுடி ஈரப்பதத்துடன் இருக்கும், உதிர்தல் ஏற்படாது மற்றும் முடியும் மென்மையாக இருக்கும்.
3. மழையில் நனைந்தால்..
மாலையில் நனைந்த உடன் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கவும். இதனால் உங்கள் தலைமுடியில் இருந்து மழை நீர் சுத்தம் செய்யப்படும். இதை செய்யாவிட்டால், நீரால் முடி முடி கொட்ட ஆரம்பிக்கும்.
4. மசாஜ் செய்யுங்கள்:
மலையாளத்தில் தலை முடிக்கு மசாஜ் செய்வது மிகவும் அவசியம். இது முடியை பலப்படுத்துகிறது. நீங்கள் முடிக்கு மசாஜ் செய்ய எந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது முடியை வலுவாக்குவது மட்டுமின்றி பளபளப்பாகவும் மாற்றும்.
5. ஈரத்துடன் சீப்ப வேண்டாம்:
மழைக்காலத்தில் தலைக்கு குளித்த பிறகு முடியை நன்கு உலர்த்தி, பிறகு சீவ வேண்டும். ஈரமான தலையுடன் முடியை சீப்பும்போது முடி உடைந்து விடும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: முடி உதிர்வை தடுக்க.. ஒரு வாரத்தில் தலைமுடிக்கு எத்தனை முறை எண்ணெய் தேய்க்க வேண்டும் தெரியுமா?
6. இவற்றை தவிர்க்கவும்:
மழைக்காலத்தில் தலை முடிக்கு ஜெல் கிரீம் அல்லது சீரம் போன்ற ஹெவி ஸ்டைலிங் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை உங்கள் தலை முடியை எண்ணெய் பசையாக மாற்றும். அதற்கு பதிலாக, லேசான பொருட்கள் அல்லது இயற்கை முறையை பயன்படுத்துங்கள்.
7. பெரிய பல் சீப்பை பயன்படுத்தவும்:
மழைக்காலத்தில் கூந்தல் உடையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனவே, உங்கள் தலைமுடிக்கு பெரிய அல்லது அகன்ற பல் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள் இது முடி உதிர்வை ஏற்படுத்தாது.
இதையும் படிங்க: தினமும் தலைக்கு குளிச்சா முடி அதிகம் கொட்டுமா..? உண்மை என்ன..?
8. சூடான ஸ்டைலிங் தவிர்க்கவும்:
போன்ற சூடான ஸ்டைலிங் பயன்பாட்டை குறைக்கவும். ஏனெனில், வெப்பம் உங்கள் தலைமுடியை சேதப்படுத்தி மேலும் சிக்கலாக்கும். முடிந்தால், உங்கள் தலைமுடியை ஃபேன் காற்றில் உலர வைக்கவும்.
9. மழைநீர்:
நீங்கள் மழையில் வெளியே செல்கிறீர்கள் என்றால், உங்கள் தலை முடியை தொப்பி அல்லது குடையால் பாதுகாக்கவும். மழை நீரில் மாசுகள் இருப்பதால் அது உங்கள் முடியை உயிரற்றதாக்கும் மற்றும்
உடையும்.
10. ஆரோக்கியமான உணவுகள்:
ஆரோக்கியமான கூந்தலுக்கு நல்ல ஊட்டச்சத்து அவசியம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்தும் கொழுப்பு புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடித்து, உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D