Asianet News TamilAsianet News Tamil

தாம்பத்யத்துக்கு கொஞ்ச நேரம் முன்னாடி இதை சாப்பிடுங்க போதும்...! வேறு லெவல் எனர்ஜி உங்களுக்கு தான்..!

ஒரு சிலர் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள் இது போன்றவர்கள் அதிக ஈடுபாட்டுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட ஒருசில உணவுப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

best foods to improve sexual activities
Author
Chennai, First Published Jan 28, 2020, 5:46 PM IST

தாம்பத்யத்துக்கு கொஞ்ச நேரம் முன்னாடி இதை சாப்பிடுங்க போதும்...! வேறு லெவல் எனர்ஜி உங்களுக்கு தான்..! 

திருமண வாழ்க்கைக்கு பிறகு தாம்பத்திய வாழ்க்கையும் சிறப்பாக அமைந்தால் தான் கணவனும் மனைவியும் மனமகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ்க்கை நடத்த முடியும்.

தாம்பத்ய வாழ்க்கையில் சிறிய குளறுபடி ஏற்பட்டால் கூட அதனால் சில பிரச்சனைகள் உண்டாகி கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நிற்கும் இளம்ஜோடிகள் ஏராளம். இதற்கெல்லாம் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதன்பின் ஒளிந்திருக்க கூடிய ஒரு சில காரணங்களில் மிக முக்கியமான காரணமாக அமைந்துவிடுகிறது தாம்பத்திய உறவு

ஒரு சிலர் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள் இது போன்றவர்கள் அதிக ஈடுபாட்டுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட ஒருசில உணவுப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதில் குறிப்பாக கடல் சிப்பி, அவகேடோ, வாழைப்பழம், பாதாம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செலரியை பொறுத்தவரையில் பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டும். குறிப்பாக படுக்கைக்கு செல்லும் முன் செலரியை பச்சையாக உண்டு வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதே போன்று கடல் சிப்பி கடல் சிப்பி விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும். காரணம் கடல் சிப்பிகளில் பாலுணர்ச்சியை அதிகரிக்க தேவையான ஹார்மோன் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

best foods to improve sexual activities

வாழை பழத்தில் உள்ள ப்ரோமெலைன் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகரிக்கும். மேலும் பொட்டாசியம் ரிபோஃப்ளேவின் இவை உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

முட்டையில் விட்டமின் பி6 வைட்டமின் பி5 அதிகமாக இருப்பதால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சீராக வைத்து மன அழுத்தத்தை குறைக்கும்.பாதாமில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து தம்பயத்தில் நாட்டம் அதிகரிக்க செய்யும்

best foods to improve sexual activities

இதையும் செய்யவில்லை என்றால் நம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கக்கூடிய பூண்டு எடுத்துக்கொள்ளுங்கள். இதனை  தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக தாம்பத்ய உறவு மேம்படும் வாழ்க்கை சிறக்கும். ஒற்றுமை மேலோங்கும்  

Follow Us:
Download App:
  • android
  • ios