Asianet News TamilAsianet News Tamil

தாம்பத்ய உறவுக்கு முன் இதை மட்டும் சாப்பிட்டால் போதுமாம் ..! வேறு லெவல் மகிழ்ச்சியாம் ..!

தாம்பத்ய வாழ்க்கையில் சிறிய குளறுபடி ஏற்பட்டால் கூட அதனால் சில பிரச்சனைகள் உண்டாகி கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நிற்கும் இளம்ஜோடிகள் ஏராளம். 

best foods for physical happiness and healthy lifestyle
Author
Chennai, First Published Nov 11, 2019, 4:21 PM IST

தாம்பத்ய உறவுக்கு முன் இதை  மட்டும் சாப்பிட்டால் போதுமாம் ..! வேறு லெவல் மகிழ்ச்சியாம் ..! 

திருமண வாழ்க்கைக்கு பிறகு தாம்பத்திய வாழ்க்கையும் சிறப்பாக அமைந்தால் தான் கணவனும் மனைவியும் மனமகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ்க்கை நடத்த முடியும்.

தாம்பத்ய வாழ்க்கையில் சிறிய குளறுபடி ஏற்பட்டால் கூட அதனால் சில பிரச்சனைகள் உண்டாகி கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நிற்கும் இளம்ஜோடிகள் ஏராளம். இதற்கெல்லாம் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதன்பின் ஒளிந்திருக்க கூடிய ஒரு சில காரணங்களில் மிக முக்கியமான காரணமாக அமைந்துவிடுகிறது தாம்பத்திய உறவு

best foods for physical happiness and healthy lifestyle

ஒரு சிலர் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள் இது போன்றவர்கள் அதிக ஈடுபாட்டுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட ஒருசில உணவுப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதில் குறிப்பாக கடல் சிப்பி, அவகேடோ, வாழைப்பழம், பாதாம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செலரியை பொறுத்தவரையில் பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டும். குறிப்பாக படுக்கைக்கு செல்லும் முன் செலரியை பச்சையாக உண்டு வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதே போன்று கடல் சிப்பி கடல் சிப்பி விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும். காரணம் கடல் சிப்பிகளில் பாலுணர்ச்சியை அதிகரிக்க தேவையான ஹார்மோன் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழை பழத்தில் உள்ள ப்ரோமெலைன் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகரிக்கும். மேலும் பொட்டாசியம் ரிபோஃப்ளேவின் இவை உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

best foods for physical happiness and healthy lifestyle

முட்டையில் விட்டமின் பி6 வைட்டமின் பி5 அதிகமாக இருப்பதால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சீராக வைத்து மன அழுத்தத்தை குறைக்கும்.பாதாமில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து தம்பயத்தில் நாட்டம் அதிகரிக்க செய்யும்

இதையும் செய்யவில்லை என்றால் நம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கக்கூடிய பூண்டு மற்றும் அத்திப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். பூண்டில் உள்ள அல்லிசின் ஆண் உறுப்புக்கு இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். இதன்மூலம் தாம்பத்திய உறவில் அதிக நேரம் ஈடுபட வழிவகை செய்யும். 

Follow Us:
Download App:
  • android
  • ios