குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க ...மிக சிறந்த 4 உணவு இதுதான்..! 

இன்று நாம் உண்ணும் உணவில் சத்து நிறைந்து உள்ளதா என்றால் அதற்கு பதில் கேள்விக்குறிதான். காரணம் மாறி வரும் கலாச்சாரம், ஹைபிரிட் உணவுப்பொருட்கள், அனைத்திலும் கலப்படம் என பல காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்..1980 முதல் 2000 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ஓரளவிற்கு இயற்கை உணவு பொருட்களை உண்டு உள்ளனர் என்றே சொல்லலாம்.

காரணம் அப்போதைக்கு ஹைபிரிட் மற்றும் கலப்பு பொருட்கள் என்பது அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று எங்கு பார்த்தாலும்... எதில் பார்த்தாலும் கலப்பிடம் தலைதூக்கி நிற்கிறது. இன்று நம்மால் ஓரளவிற்கு தாக்குப்பிடிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் நம்முடைய பெற்றோர்கள் சிறுவயதில் நமக்கு கொடுத்த ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களே...

ஆனால் இன்று அதை நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். ஆனால் இன்றளவும்... இப்படி இருந்தும், இன்றும் நாம் ஒரு சிலவற்றை புரிந்து கொள்ளவில்லை என்றால் பிற்காலத்தில் நம் குழந்தைகள் பெரிதளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே நம்மால் முடிந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த இயற்கை உணவு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க கற்றுக் கொள்வோம். 

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.. வாரம் 4 முறை கீரை உணவுகளை கொடுப்பது மிக சிறந்தது.நெல்லிக்காய், தேன் நெல்லிக்காய் இவற்றையும் கொடுக்கலாம். இளநீர், தேங்காய் பால், தேங்காய் இதனை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

சிவப்பு அரிசி அவல், சிவப்பு கொய்யா, பனைவெல்லம்,பசும்பால் கொடுப்பது சிறந்தது. இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

இதே போன்று,மிளகு சீரகம் சேர்த்த ரசம் கொடுத்தால் நன்கு அஜீரண கோளாறு நீங்கும். வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் குளியல் எடுப்பது மிக சிறந்தது. இவை அனைத்தும் தொடர்ந்து செய்யும்போது கண்டிப்பாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.