Asianet News TamilAsianet News Tamil

தாம்பத்ய வாழ்க்கை சிறக்க வாரத்திற்கு 1 முறை இதை உண்டு வந்தால் போதும்.. வேறு எந்த பிரச்சனையும் வரவே வராதாம்..!

தினமும் இந்த உணவு வகைகளை எடுத்து வந்தால், தாம்பத்ய வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்குமாம்.

best foods for couples happiest  life
Author
Chennai, First Published Feb 14, 2019, 2:09 PM IST

தாம்பத்ய வாழ்க்கை சிறக்க வாரத்திற்கு 1 முறை இதை உண்டு வந்தால் போதும்.. வேறு எந்த பிரச்சனையும் வரவே வராதாம்..! 

தினமும் இந்த உணவு வகைகளை எடுத்து வந்தால், தாம்பத்ய வாழ்க்கை  மிகவும் சிறப்பாக இருக்குமாம்.

பச்சைக் கீரை வகைகள்

பொதுவாகவே கீரைகளில் அனைத்து வகையான வைட்டமின்கள் உள்ளது. தாம்பத்ய வாழ்க்கைக்கு தேவையான ஹார்மோன்களை சுரக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தவிர பச்சை கீரை வகைகளில் இரும்புச் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்திக்கு மிகவும் துணையாக இருக்கும்.

கடல் உணவு வகைகள்

அதிக ஊட்டச் சத்து மிகுந்தது. இதில் உள்ள ஒமேகா-3 ஆசிட் உள்ளது இது மூளையின் சுறுசுறுப்புக்கு வழிவகுக்கின்றது

விதைகள்

சோயாபீன்ஸ். சூரியகாந்தி விதை. பூசணி விதை போன்றவற்றில் டெஸ்டோஸ்டீரான் அளவை அதிகரிக்க கூடிய பொருட்கள் இருப்பதால் தாம்பத்ய உறவுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நட்ஸ் 

தாம்பத்திய உறவுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளும் உட்கொள்வதன் மூலம் கிடைக்கும். குறிப்பாக பாதாம் வேர்க்கடலை பிஸ்தா மிகவும் தேவையான ஒன்றாக கருதப்படுகிறது. விட்டமின் சி அதிகமாக உள்ள பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் உறுப்புகளுக்கு மிகவும் நல்லது அந்த வகையில் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சிட்ரஸ் பழங்கள் கிவி பழம் ஸ்ட்ராபெரி உள்ளிட்டவை அதிக பயனுள்ளதாக இருக்கும்

best foods for couples happiest  life

Dark chocolate எடுத்துக்கொள்வதால் இதிலுள்ள ஒரு சில பொருட்கள் தாம்பத்திய உறவை மேம்படுத்த உதவும். தாம்பத்திய உறவுக்கு தேவையான ஹார்மோன்களை சீராக வைத்துக் கொண்டு உணர்வுகளை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால்,டெஸ்டோஸ்டீரான் அதிகரிக்கச் செய்கின்றது. இதன்மூலம் தாம்பத்ய உறவு மேம்படும்.பூண்டை தேவையான அளவு அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் தாம்பத்ய உணர்வு அடிக்கடி ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது.

best foods for couples happiest  life

இதுபோன்ற வாழைப்பழம், பூண்டு, ஆலிவ் ஆயில், போதுமான அளவுக்கு காரம் சேர்த்து உணவை உட்கொள்ளுதல், பழங்கள், கீரை வகைகள், கடல் உணவுகள் இவை அனைத்தையும் வாரத்திற்கு ஒரு முறையாவது சமைத்து உண்டு வந்தால் தாம்பத்திய உறவு சிறப்பாக இருக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios