Asianet News TamilAsianet News Tamil

ஒவ்வொரு நாளும் இனிய நாளாக மாற.... தியானம் செய்ய தொடங்குவது எப்படி?

இனி வரும் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக மாற தியானம் செய்ய தொடங்குவதற்கு முன் இவை மிக அவசியம். 

Benefits of yoga
Author
Chennai, First Published Jan 12, 2022, 6:34 AM IST

ஓமைகிறான், டெல்டாக்ரான் கரோனா உள்ளிட்ட தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள், இந்த 2022இல் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, கோபம், பயம், பதட்டம், விரக்தி, பீதி, போன்ற மனநலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளது. இவை தவிர, சுற்றுப்புற மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு முரண்பாடுகளையும் எதிர்கொள்ள இந்த வருடத்தில் நாம் தயாராக வேண்டும் என்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வருடம், சமூகம் சார்ந்த சில பிரச்சனைகள் மற்றும் பொருளாதார பின்னடைவு போன்றவற்றிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் நாம் 'கத்தியின் விளிம்பில்' இருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இவற்றிலிருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள நாமே, பாசிட்டிவான செயல்களில் ஈடுபட வேண்டும். இவை நமக்கு தேவையற்ற எண்ணங்களைக் கைவிடுவது, எதிர்வரும் சவால்களை தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாள கற்று கொடுக்கிறது. எனவே, இனி வரும் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக மாற தியானம் செய்ய தொடங்குவதற்கு முன் இவை மிக அவசியம். 

Benefits of yoga

முதலில் தியானம் செய்வதற்கு ஒரு சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த இடம் அமைதியான இரைச்சல்களற்ற இடமாக இருக்க வேண்டும். கண்களை மூடி நீங்கள் அமரும் போது உங்களை யாரும் தொந்தரவு செய்யாத இடமாக இருக்க வேண்டும். காற்றோட்டம் உள்ள இடமாகவும், வாகனப் புகைகளோ மற்றவகை மாசுகளோ உட்புகாத இடமாக இருப்பது நல்லது. குறிப்பாக, குழந்தைகள், செல்லப்பிராணிகள் நுழையமுடியாத படி கதவை தாழிட்டுக் கொள்வது நல்லது. பிறகு, அந்த இடத்தில் ஊதுபத்தி ஏற்றி விட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமர்ந்த பின் உங்களால் முடிந்தவரை மூச்சுகாற்றினை நாசியின் வழியாக வேகமாக உள்ளிழுத்து வேகமாக வெளியிடவும். காற்றை உள்ளிழுப்பதும், வெளியிடுவதும் சம அளவில் இருக்க வேண்டும் இப்பயிற்சியினை ஒரு நிமிடம் வரை எடுத்துகொள்ளலாம்.

இப்பயிற்சி முடிந்ததும் அமைதியாக இருந்து உங்கள் மூச்சுகாற்று சாதாரண நிலைக்கு வந்தபின் மனதில் உதடுகள் அசையாமல் இந்த வார்த்தைகளை சொல்ல வேண்டும்.

நான் தயாராக இருக்கிறேன்.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
 
நான் தளர்வாக இல்லை.

என் மனம் முழுவதும் என் மூச்சுகற்றின் மீது கவனமாக இருக்கிறது, நான் இடைவிடாமல் விழிப்புணர்வோடு என் மூச்சுகாற்றினை கவனித்துக்கொண்டு இருக்கிறேன். என்று மனம் உருகிச் சொல்ல வேண்டும்.

நீங்கள் பத்மாசனத்திலோ அல்லது வஜ்ஜிராசனத்திலோ அமர்ந்து ஐந்து நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். ஆசனம் தெரியாதவர்கள் சப்பணமிட்டு அமர்ந்த நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு உடல் அசைவு இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

மேற்சொன்ன வார்த்தைகளை மனதில் ஒரு நிமிடம் பதியும்படி சொல்லவும். இவ்வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் நம் மனம் அமைய வேண்டும். ஏழு நாட்களில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் உடலும் மனமும் அமைவதை நம்மால் உணர முடியும்.

Benefits of yoga

பிறகு ஒரு நிமிடம் மௌனமாக இருந்து மூச்சுகாற்றினை கவனிக்கவேண்டும். நாசித்துவாரங்களின் வழியே உள்ளே வரும் காற்றையும் வெளியே செல்லும் காற்றையும் கவனித்து வரவும்.

அம்பு எய்ய தயாராக இருப்பவன் எப்படி உலகை மறந்து தன இலக்கை மட்டுமே நோக்கி இருப்பானோ அதுபோல் உங்கள் மனமானது மூச்சுக்காற்றை மட்டுமே கவனித்திருக்க வேண்டும். இதுவே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். இதற்கு இடையே மனம் ஏதாவது சிந்தனையில் ஓடச்செய்தால் உங்கள் மன ஓட்டத்தையே சற்று நேரம் கவனித்து வரவும். இதில் ஏதும் தவறு இல்லை. நம் இலக்கு மூச்சுகாற்றினை கவனிப்பதே. குறிக்கோளை அடையும் வரை ஓய்வில்லாமல் உழைப்பதுதான் நமது லட்சியமாகும்.

மேற்சொன்னவாறு மூச்சுகாற்றினை ஐந்து நிமிடம் கவனித்தது முடிந்து விட்டது என்றால் இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு முடியுங்கள். நாளுக்குநாள் பிரார்த்தனைகளை மாற்ற கூடாது.

உங்கள் தியானம் மற்றும் பிரார்த்தனை முடிந்தவுடன் நம்பிக்கையோடு எழுந்து இருக்கவேண்டும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று எண்ணிக்கொண்டு வெற்றிநடை போடுங்கள். நீங்கள் செய்கிற ஐந்து நிமிட தியானமானது நீங்கள் பணியாற்றும் எட்டு மணி நேரத்திற்கு உதவியாக இருக்கும். 

இந்த முதல் கட்ட தியான முறையை முதல் ஐந்து நாட்கள் ஐந்து நிமிடங்களும் அடுத்த ஐந்து நாட்களில் பத்து நிமிடங்களாகவும் மாற்றிக்கொள்ளலாம். மேற்கூறிய வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி வந்தால், நீங்கள் மகிழ்ச்சியாகவும்,ஆரோக்கியமாகவும் வாழலாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios