மாபெரும் நன்மை கொடுக்கும் முளைகட்டிய தானியங்கள்...!

மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப நாம் உண்ணும் உணவு முறையிலும் பல மாற்றத்தை கொண்டு வந்து விட்டோம். ஆனால் கலப்பிட உணவின் பிரச்சனை தெரியாமல் மிக எளிதாக ஒவ்வொரு நாளும் கடந்து விடுகிறோம்.

இன்று நம் குழந்தைகள் உண்ணும் உணவு எந்த அளவுக்கு சத்து நிறைந்தது என சொல்லிவிட முடியுமா? முடியாது அல்லவா.. இருந்தாலும் கண்முன்னே நடக்கும் சில கெட்ட விஷயங்களை நம்மால் தவிர்க்க முடியும். அதற்கு பதிலாக நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். அடுத்த தலைமுறையினருக்கு கொடுத்து செல்வ செழிப்போடு ஆரோக்கியமா வாழ வழிவகை செய்து கொடுக்கலாம்.அதற்கு நாம் செய்ய வேண்டியது இப்போதிலிருந்தே உணவு பழக்கவழக்கங்களை சற்று மாற்றி அவர்களை பழக்குவதே....

அதில் குறிப்பாக முளைவிட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எவ்வளவு பயனுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.

அதேப்போன்று முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கத்தை மிகவும் குறைக்க முடியும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமன் அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும். முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறைந்து மூட்டு வலியும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முளைவிட்ட கறுப்பு உளுந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். இதுபோன்று முளைவிட்ட தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது எண்ணிலடங்கா பலன்களைக் கொடுத்து எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகை செய்ய முடியும்.

 எனவே வாரத்தில் 3 முறையாவது முளைக்கட்டிய பயறுகளை சாப்பிட்டு வருவது நல்லது