பெண்களின் தலைமுடிக்கு சாம்பிராணி புகை உண்மையில் நல்லதா?
Sambrani Benefits : பெண்கள் தங்களது தலைமுடிக்கு சாம்பிராணி புகை போடுவது உண்மையில் நல்லதா.. இல்லையா என்பதை பற்றி இங்கு காணலாம்.
தினசரி குளியல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தினமும் செய்யும் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். என்னதான் நாம் தலைக்கு குளிச்சாலும் தலைமுடிக்கு சாம்பிராணி காண்பிப்பது ரொம்பவே நல்லது என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு சிலரோ இது நல்லதல்ல என்றும், இதனால் சுவாச பிரச்சனைகள் ஏற்படும் என்றும் சொல்லி வருகின்றனர். ஆனால் உண்மையில் தலைக்கு குளித்துப் பிறகு தலை முடிக்கு சாம்பிராணி காட்டுவது நல்லதா அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.
முதலில், அந்த காலத்து பெண்கள் அனைவருக்கும் முடி ரொம்பவே நீளமாக இருக்கும். இதனால் அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளித்து, பின் தலை முடிக்கு சாம்பிராணி புகை காண்பிப்பார்கள். இந்த சாம்பிராணி புகையானது அவர்கள் தலைமுடிக்கு போடுவதால் வீடு முழுவதும் அதன் புகையானது பரவும். இதனால் வீட்டில் இருக்கும் கொசுக்கள், ஈக்கள், பூச்சிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத அனைத்து கிருமிகளும் அளிக்கப்படும். ஏனெனில் சாம்பிராணி ஒரு நோய் தடுப்பு மருந்தாக செயல்படுவதால்தான்..
சாம்பிராணி என்றால் என்ன?
சாம்பிராணி பிரங்கின்சென்ஸ் (frankincense) என்ற மரத்தில் இருந்து வடியும் பிசின் தான் இது. இந்த பிசினானது எளிதில் பற்றக் கூடிய தன்மை உடையது. இதிலிருந்து வரும் புகைதான் பெண்கள் தலை முடிக்கு காட்டுவார்கள்.
தலைமுடிக்கு சாம்பிராணி புகை போடுவதன் நன்மைகள்:
சாம்பிராணி புகையை பெண்கள் தலைக்கு காட்டுவதால் அவர்களது உச்சம் தலையில் இருக்கும் ஈரம் சீக்கிரமே காய்ந்து விடும். அதுமட்டுமன்றி அவர்களது தலைமுடியில் நறுமணமும் வீசும். தற்போதைய காலத்தில் ஷாம்பு தவிர தலைமுடி வாசனைக்கு பல பொருட்கள் உள்ளன. ஆனால் அந்த காலத்தில் இது மாதிரி எதுவும் இல்லாததால் பெண்கள் தங்கள் தலைமுடி வாசனைக்கு சாம்பிராணியை தான் பயன்படுத்தி வந்தனர். முக்கியமாக தலை முடிக்கு சாம்பிராணி காட்டுவதால் தலைமுடி நரைக்காமல் கருமையாக வளரும்.
இதையும் படிங்க: தொடர்ந்து 48 நாட்கள் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போடுங்க.. வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலகி ஓடும்!
சாம்பிராணி புகையின் மத நன்மைகள்:
- சாம்பிராணியுடன் சந்தனத்தை போட்டு வீட்டில் தூபமிட்டால் லட்சுமி கடாட்சம் வீட்டின் நிலைத்திருக்கும் என்ற மத நம்பிக்கை உள்ளது.
- அதுமட்டுமின்றி, சாம்பிராணியுடன் அருகம்புல் பொடியை சேர்த்து வீட்டில் தூபமிட்டாலும், வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்குமாம்.
- திருமணமான சுமங்கலி பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொ மாலை வேளையிலும் வீட்டில் தீபம் ஏற்றி, வீடு முழுவதும் சாம்பிராணி தூபமிட்டு வந்தால் வீட்டில் இருக்கும் பீடைகள் அனைத்தும் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- வியாபாரம் செய்பவர்கள் தங்களது கடைகளில் சாம்பிராணி புகையை தூபமிட்டு வந்தால் கண் திருஷ்டி அனைத்தும் விலகி ஓடும். மேலும் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: உங்க வீட்டில் சாம்பிராணி போட்டால் முதல்ல 'இத' படிங்க.. அப்புறம் போடுங்க! உங்க நல்லதுக்கு தான்!
சாம்பிராணி புகையின் பிற நன்மைகள்:
- பெண்கள் சாம்பிராணி புகையை சுவாசித்தால் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்படும் மற்றும் எந்தவித தொற்று நோய்களும் வராமல் தடுக்கப்படும்.
- சாம்பிராணி பிசினில் இருக்கும் வேதிப்பொருள் புற்றுநோயை குணப்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.
- சாம்பிராணி மற்றும் சின்ன வெங்காயம் இவை இரண்டையும் அரைத்து உடலில் கட்டிகள் இருக்கும் பகுதியில் தடவி வந்தால் வீக்கம் குணமாகும் என்றும் சொல்லப்படுகின்றது.
- சாம்பிராணியுடன் வேப்பிலை சேர்த்து புவி விட்டால் வீட்டில் கொசுக்கள் தொல்லை இருக்காது.
இப்படி சாம்பிராணி புகையில் பல நன்மைகள் ஒளிந்திருப்பதால் தான் என்னவோ நம்முடியை முன்னோர்கள் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு வந்தனர்.