சுடு தண்ணீர் ரொம்ப ஈஸியா கிடைக்கிறதால.. "மதிப்பு" இல்லாம போச்சி..! இப்பாவது தெரிஞ்சிக்கோங்க .... 

விஞ்ஞானம் எந்த அளவுக்கு உயர்ந்து விட்டாலும் நாம் உண்ணும் உணவு இயற்கையாக இருந்தால்தான் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது அல்லவா..? அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் கலப்படம் இல்லாத உணவை பார்ப்பது அரிதிலும் அரிது.

இருந்தபோதிலும் கிடைக்கும் உணவுப் பொருட்களை வாங்கி உண்டு வருகிறோம். இதன் காரணமாகத் தான் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு சிறு வயதிலேயே குழந்தைகள் பல்வேறு உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் சிறிய வயதிலேயே கண் பார்வை, குறைதல் ரத்த சோகை ஏற்படுத்தல், நோயெதிர்ப்பு தன்மை குறைவு என சொல்லிக்கொண்டே போகலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கண்ணுக்கு தெரிந்த ஒரு நன்மை குறித்த ஓர் புரிதல், நமக்கு இருந்தும் கூட பின்பற்ற தயங்குவது ஏன்? என்ற கேள்வி கண்டிப்பாக எழத்தான் செய்கிறது. அது என்ன? வெரி சிம்பிள்... "சுடுதண்ணீர்" ஆம்...

நாம் உணவு உட்கொள்ளும் முன்னும் உண்ட பின்னும் சுடு தண்ணீரை அருந்துவது குறித்த ஓர் விழிப்புணர்வு பதிவு தான் இது. அந்த வகையில் சுடுதண்ணீர் எந்த அளவுக்கு நம் உடலுக்கு நன்மையை செய்யக்கூடியது என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

உடலில் உள்ள கழிவுப் பொருட்களை அகற்றுகிறது. அதாவது சுடு தண்ணீரை குடிக்கும் போது உடல் வெப்பநிலை அதிகரித்து உடலில் இருந்து வியர்வை வெளியேறும் போது தேவையில்லாத கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி விடும்.

ஜீரணமாகாமல் சிரமப்படுபவர்கள் சுடு தண்ணீரை குடிக்கும் போது, உடலில் உள்ள வாயு அசிடிட்டி அனைத்தும் நீங்கும். செரிமானம் விரைவில் நடைபெறும். அதிலும் குறிப்பாக உணவை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக சுடு தண்ணீரை குடித்தால் மிக விரைவில் செரிமானம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரான குடலியக்கம்:  தினமும் காலை எழுந்தவுடன் சுடு தண்ணீரை அருந்தி வந்தால் நாம் உண்ணும் உணவு மிக எளிதாக வயிற்றை அடைவதற்கு சிறுகுடல் சிறப்பாக செயல்படும். மேலும் ஜீரணக் கோளாறு எதுவும் இருக்காது. இவ்வாறு செய்து வந்தால் உடலளவில் எந்தவிதமான தொந்தரவையும் நீங்கள் உணர மாட்டீர்கள்.

ரத்த சுழற்சியை அதிகரிக்க செய்யும். இது எப்படி என்றால், நாம் சுடு தண்ணீரை அருந்தும்போது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை அகற்றும். குறிப்பாக நரம்பு மண்டலத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடலில் இருந்து வெளியேற்றும்.

உடல் முழுக்க ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி, சிரை இவற்றின் இவற்றை விரிவடையச் செய்து சீராக ரத்தம் பாய்வதற்கு வழிவகை செய்யும். இதன் மூலம் ரத்த அழுத்தம் ஏற்படாது. மற்றும் ரத்த அடைப்பு வராது. ரத்தமும் சுத்தம் செய்யப்படும்.

தோல் வியாதிகள் வராமல் தடுக்கும். அதாவது சுடு தண்ணீரை குடிக்கும் போது நம் தோலில் உள்ள துளைகள் மூலமாக வியர்வை வெளியேறுகிறது. அந்த ஒரு தருணத்தில் தோலின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய அக்னி மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

இது தவிர்த்து உடலை நன்கு கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கும் உடல் எடை குறைவதற்கும் ஏதாவது உடலில் குறிப்பிட்ட பாகத்தில் வலி ஏற்படும் போது, சுடு தண்ணீரை அருந்தினால் தசைகளை தளர்வடையச் செய்து வலியை குறைக்கும்.