முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

கால்சியம், பொட்டாசியம் , ட்டமின் ஏ, சி ஆகியவை நிறைந்திருக்கின்றன. முருங்கைக் காய்கள், இலை, பூ மட்டுமன்றி, பட்டைகள், வேர்கள், விதை, முருங்கை பிசின் ஆகியவை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப காலத்திலேயே சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து முற்றிலும் காப்பாற்றும். முருங்கை இலைகள், விதைகள், வேர்களில் காயங்களை ஆற்றும் தன்மைகள் உள்ளன.காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது. 

முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் செல்களில் சேதத்தை தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்களை கட்டுப்படுத்துகிறது - உயிர் அணுக்கள் சேதமாவதைத் தடுக்கவும் உதவுகிறது. 

முருங்கை இலைப் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால் இதய நோய்கள் ஈ ஆர்த்தரிட்டிஸ், எடை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு தீர்வாக உள்ளது.முருங்கை இலைப் பொடி மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் இ, வைட்டமின் சி ஆகியவை மன வளம், நினைவுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

முருங்கை இலையை உலர்த்தி, பொடி செய்து கிரீன் டீ போல, பயன்படுத்தலாம். அனால் முருங்கைப் பொடியை டீயில் ஒருநாளைக்கு அரை முதல் ஒரு தேக்கரண்டி மட்டுமே பயன்படுத்தவேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். முருங்கை  கீரை மூலம் இத்தனை நன்மைகள் இருக்கும் போது அதனை பயன்படுத்துவது நல்லது.