கோடி நன்மைகளை கொடுக்கும் இஞ்சி..! ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை...

இஞ்சியை அவ்வப்போது நம் உணவில் சேர்த்து பயன்படுத்தி வருகிறோம் அல்லவா..?அந்த இஞ்சி எந்த அளவிற்கு நம் உடலுக்கு பயன் தருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா...? 

இஞ்சியை தண்ணீரில் கலந்து அந்த நீரில் சற்று துளசி இலையை சேர்த்து பருகி வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது. அதே போன்று ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் இஞ்சியை அரைத்து நீரில் கலந்து நெற்றியில் தடவ ஒற்றை தலைவலி பறந்துபோகும். சளி தும்மல் எதுவாக இருந்தாலும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா உள்ளவர்கள் எலுமிச்சை சாறு, வெங்காய சாறு, இஞ்சி சாறு இவை மூன்றையும் கலந்து தினமும் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வர எந்த பிரச்சினையும் இருக்காது.

நெஞ்செரிச்சல் சரி செய்யும் வாந்தி குமட்டல் இருப்பவர்கள் அடிக்கடி இஞ்சி சேர்த்து சமைக்கப்பட்ட உணவை எடுத்துக்கொண்டால் நல்லது. உடலில் சேரும் நச்சுக்களை மிக எளிதாக வெளியேற்றும். இஞ்சி.தேவையில்லாத கொழுப்புக்களையும் அகற்றிவிடும். வயிற்றில் இருக்கும் நச்சுகளை நீக்க தினமும் சர்க்கரைப்பாகில் ஊற வைக்கப்பட்ட இஞ்சியை சாப்பிட்டு வர வேண்டும்.

பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலியை கட்டுப்படுத்த இஞ்சி சார்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது. இத்தனை பயன்களை கொண்டஇஞ்சியை தினமும் நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.