1 கிளாஸ் அரச இலை தண்ணீர் போதும்.. பல நோய்களையும் விரட்டி அடிக்கும்!

Arasa Maram Leaves Water Benefits : அரச இலை சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இப்போது அரச இலை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

benefits of drinking peepal leaf or arasa maram leaves water in empty stomach in tamil mks

அரசமரம் இந்து மதத்தில் வழிபடப்படுகிறது. ஆயுர்வேதத்தில் அரச மரத்தின் இலைகள் பட்டைகள், பழங்கள் மற்றும் வேர்கள் பல உடல்நிலை பிரச்சினைகளுக்கு மருந்துகாக பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் அவற்றில் பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அரச இலைகள் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமின்றி அவற்றின் பயன்பாடு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா? ஆம் அரச இலையை தண்ணீரில் கொதிக்க விட்டு அந்த நீரை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். அது என்னென்ன நன்மைகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அரச இலையின் மருத்துவ குணங்கள்:

அரச இலையில் பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இதில் இருக்கும் டானின்கள், பைட்டோ கெமிக்கல்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

அரச இலை தண்ணீரின் நன்மைகள்:

இதே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் : 

இதய ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு அரச இலை தண்ணீர் மிகவும் நன்மை பயக்கும். அரச இலை தண்ணீரை குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் மற்றும் இதயத்தின் தசைகள் வலுவடையும்.

செரிமான அமைப்பு மேம்படும் : 

அரச இலை தண்ணீர் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது வாயு, அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு, வீக்கம், வாந்தி, மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :

அரச மரத்தின் இலையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்கிய எதிர்ப்பு பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது.

நச்சுக்களை அகற்றும் :

வெறும் வயிற்றில் அரச இலையின் தண்ணீரை குடித்து வந்தால் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற பெரிதும் உதவுகிறது.

மன அழுத்தம் & பதட்டத்தை குறைக்கும் :

அரச இலையின் தண்ணீர் மூளையை அமைதிப்படுத்தி, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க:  பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவது ஏன் தெரியுமா? சுற்றினால் இந்த தோஷம் நீங்கும்..!!

பிற நன்மைகள் :

- ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

- கெட்ட கொலஸ்ட்ராலை குறிக்கும் மற்றும் உயரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

- நுரையீரலில் ஆரோக்கியமாக வைத்து சுவாச பிரச்சனைகளை தடுக்கும்.

- சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும்.

இதையும் படிங்க:  சனிக்கிழமை அன்று அசோக மரத்துக்கு விளக்கு ஏற்றி வழிப்பட்டால்.. மும்மூர்த்திகள் என்ன தருவார்கள் தெரியுமா?

அரச இலை தண்ணீரை எப்படி, எப்போது குடிக்க வேண்டும்?

இதற்கு ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீரை எடுத்து அதில் இரண்டு அல்லது மூன்று அரச இலைகளை போட்டு தண்ணீர் பாதியளவு வரும் வரை நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி ஆற வைக்கவும். பின் அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios