begger did maternity
ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்பது ,மறு ஜென்மம் எடுப்பது போல . அப்படிப்பட்ட பிரசவம் என்பது எந்த சூழ்நிலையில் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்து பார்த்தால் மெய் சிலிர்க்கும் ஆனால், இங்கு நடந்தது ஒரு வியப்பான சம்பவம்
கர்நாடக மாநிலம் சன்னா பஜார் பகுதியை சேர்ந்தவர் எல்லாம்மா,இவருக்கு ஏற்கனவே 3 ஆண் குழந்தைகள் உள்ளனர் . அடுத்ததாக பெண் குழந்தை பிறக்கும் என்ற ஆசையில் மீண்டும் கர்பமாகி உள்ளார் எல்லம்மா.
கர்பமாக இருந்த எல்லம்மாவுக்கு ரத்த சோகை இருந்ததால், சிகிச்சைக்காக ராய்ச்சூரில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே தடுமாறி விழுந்துள்ளார் .
அதனை பார்த்த ஒரு பிச்சைகார பெண்மணி அப்பெணிற்கு பிரசவம் பார்த்துள்ளார் . பிரசவத்தில் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்தது. பிச்சைகார பெண்மணியின் மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது .
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர் .
