மும்பை

மும்பையில் ஒரு தனியார் பாரில், இன்று முதல் டிசம்பர் 8 வரை பீர் ரூ.2-க்கும், விஸ்கி ரூ.49-க்கும் விற்கப்படும் என்று அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

மும்பையில், மதுபிரியர்களுக்காக மிகக் குறைந்த விலையில், நான்கு நாள்களுக்கு மது விற்க்கப்படும் என்று சலுகையை அறிவித்து அனைவரின் கவனத்தையும் தனியார் நிறுவனம் ஒன்று தன் பக்கம் திருப்பியுள்ளது.

அந்த சலுகையின்படி, கிங் பிஷர் பீர் ரூ.2-க்கும், ஜானி வால்கர் பிளாக் லேபிள் ரூ.49-க்கும் சலுகை விலையில் வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சலுகையானது டிசம்பர் 4 முதல் டிசம்பர் 8 வரை மட்டுமே வழங்கப்படும் என்று குறுகிய கால சலுகையாக இதனை அறிவித்துள்ளது.

மேலும் இந்த சலுகை மதியம் முதல் பார் முடியும் நேரம் மட்டுமே இந்த வழங்கபபடும் என்றும் பார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை, டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது விநியோகத்தை பெருக்குகின்றனர்.

இந்த அறிவிப்பைத் தெரிந்துக் கொண்ட ஏராளமான மதுபிரியர்கள், நண்பர்களுடன் அந்த பாருக்குச் சென்று மது அருந்தி கொண்டாடுகின்றனர்.