Asianet News TamilAsianet News Tamil

எல்லாத்தையும் யோசிச்சோமே... ரூபாய் தாளில் கோட்டை விட்டுட்டோமோ..?

ஆம்... சமூக விலகல் முக்கியம் தான்.அதே வேளையில், நாம் தும்பும் போதும், இரும்பும் போதும்,பாதிக்கப்பட்டவர்களின் கை கால் பட்ட இடங்கள் என அனைத்தின் மூலம் நோய் தோற்று பரவ வாய்ப்பு உள்ளது என தெரியும்.

be alert while using money and make sure will not spread to others
Author
Chennai, First Published Mar 26, 2020, 11:55 AM IST

எல்லாத்தையும் யோசிச்சோமே... ரூபாய் தாளில் கோட்டை விட்டுட்டோமோ..? 

அதி தீவிரமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் நடமாட்டம் குறையவும், கொரோனா பரவுதலை தடுக்கவும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு இருந்தாலும் பல இடங்களில் மக்கள் நடமாட்டம் பார்க்க முடிகிறது. 

என்னதான் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், ஒரு பக்கம் மெல்ல மெல்ல பரவி வருகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சமூக விலகல் மட்டுமே  இதற்கான  தீர்வு என நாம் நம்பி கொண்டிருக்கிறோம்.ஆம்... சமூக விலகல் முக்கியம் தான்.அதே வேளையில், நாம் தும்பும் போதும், இரும்பும் போதும்,பாதிக்கப்பட்டவர்களின் கை கால் பட்ட இடங்கள் என அனைத்தின் மூலம் நோய் தோற்று பரவ வாய்ப்பு உள்ளது என தெரியும்.

ஆனால் ரூபாய் தாள் மூலமாக கூட நோய் தோற்று பரவ வாய்ப்பு இருக்கலாம் அல்லவா..? காரணம் .. நாம் பயன்படுத்தும் ரூபாய் தாள் எத்தனையோ நபரிடம் இருந்து கைமாறி தான் நமக்கு கிடைத்து இருக்கும். அதனை   தொட்டபிறகு நம் கைகளை கழுவி இருப்போமா என்ன..? அதே ரூபாய் தாளை மற்றவர்களுக்கு வழங்கும் போது பின்னர் அது தொடர்ந்து கைமாறி செல்கிறது அல்லவா..? 

எனவே முடிந்தவரை டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வது நல்லது. இயலாதவர்கள் முடிந்தவரை கைகளை அவ்வப்போது கழுவி தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது. கொரோனாவிற்கு எதிராக 130 கோடி இந்திய மக்களும் ஒன்று இணைந்து போராட வேண்டிய நிலமையில் இருக்கிறோம்.

எனவே தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொள்வது மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் பரவாமல்  பார்த்துக்கொள்ளுதல் வேண்டும். 

Follow Us:
Download App:
  • android
  • ios