நேற்று 11 மணி அளவில், கத்தி பாரா மேம்பாலத்தை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த  போக்குவரத்தை துறை ஆய்வாளர் நட்ராஜ், லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர்  இழந்தார்.

இதை படிக்கும் போது நமக்கு இதெல்லாம் ஒரு செய்தியாக மட்டும் தான் யோசிக்க தோன்றும் அல்லவா..? ஆனால் உண்மையான விஷயம் என்ன..? இப்படி ஒரு விபத்தை ஏற்படுவது இயற்கை என சொல்லி விட முடியுமா..? அல்லது எதிர்பாராத ஒன்று என சொல்லலாமா ..?


 
சற்று சிந்தித்து பாருங்கள்.. நம்மால் எத்தனையோ பேர், பல்லாயிரக்கணக்கானோர் தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வருகிறோம். நாம் என்னதான் கவனிப்பாக சென்றாலும் சில சமயங்களில் விதி விளையாடிவிடும். ஆனால் ஒரு சில நேரங்களில் மனித உயிர்களுக்கு மரியாதையே இல்லாத அளவிற்கு வேகமாகவும், சைட் மிரர் கூட பார்க்காமல் தான் தோன்றி தனமாக வளைவு வரும் போது வேகமாக  வளைப்பது. அந்த விஷயத்தில் கால் டாக்சி இயக்குபவர்களும், தண்ணீர் லாரி, டிப்பர் லாரி .. இதற்கெல்லாம் முன்னாடி .. யாருக்கும் அடங்கா வாலிபர்கள் வேகமாக ரேஸ் செல்வது... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

வளைத்து வளைத்து வண்டி ஓட்டுவது என்ன.... வேகமாக வரும் போது உருவாகும் அந்த சவுண்டு கேட்ட பல  பேர் பயந்து திடீரென ஓரம் ஒதுக்குவார்கள்.. இதே போன்று தான் இரவு நேரங்களில் செல்லும் லோடு லாரி எவ்வளவு வேகமாக செல்லும் தெரியுமா..? அருகில் என்ன வருகிறது என்ற யோசனையே  இருக்காது...

இதற்கெல்லாம் யாரையும் குறை சில முடியாது.. நம்மால் பல பேர் முதலில் திருந்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். மற்ற வாகனத்தை விட இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில், வாகனத்தை இயக்கும் போது மற்ற எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல், பயணிப்பது  நல்லது. போன் பேசிக்கொண்டும் அலுவலகத்தில் மேனஜர் திட்டியதையும் குடும்ப பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டும் வண்டியை இயக்கினால் நாம் ஏற்படுத்தும் விபத்தை நமக்கு மட்டுமல்ல.. மற்றவர்களையும் இழக்க செய்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.