மாட்டிக்காதீங்க மக்களே..!  ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து? 

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் அணியும் முறையை ஏன் முழுமையாக அமல்படுத்த வில்லை? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபத்தல்கள் தமிழக அரசுக்கு கேள்வியை எழுப்பி  உள்ளது. 

பெங்களூர் டெல்லி போன்ற பெருநகரங்களில் ஹெல்மட் கட்டாயம் என்கிற விதி கண்டிப்புடன் பின்பற்றப் படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த முறை முழுமையாக  பின்பற்றப்படுவது இல்லை என என நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். 

மேலும்,  இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதும் கிடையாது...ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை  ஏன் ரத்து செய்ய கூடாது என  நீதிபதிகள் கேள்வி எழுப்பி  உள்ளனர். மேலும் காவலர்களும் ஹெல்மெட் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தததற்கு, தமிழக அரசின் சார்பாக," ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவலர்களை பணி இடை நீக்கம் செய்கிறோம்" என தெரிவித்து உள்ளனர்.

இருந்த போதிலும், பல்வேறு கேள்விகளை எழுப்பி, வரும் புதன் கிழமைக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதிக வெயில் காரணமாக  மக்கள் ஹெல்மெட் அணிய சிரமப்படுவதாக சென்ற விசாரணையின் போது தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.