"பட்ஜெட்"வார்த்தைக்கு மொழி பெயர்த்தவரே பாரதியார் தான்..! தெரியுமா இந்த சுவாரஸ்ய மேட்டர்..!

பாரத ஜன சபை நூற்றாண்டு விழா கருத்தரங்கை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுத்துறை பண்பாட்டு துறையும் சேர்ந்து நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பாரதியார் பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து உள்ளார். தனது கருத்துக்கள் அனைத்து மக்களையும் மிக எளிதாக சென்றடைய வேண்டும் என்பதற்காக 
பல ஆங்கில வார்த்தைகளை மொழிபெயர்த்தவர் பாரதியார்.

அந்த வரிசையில் ஆங்கிலக் கவிதைகள், வேதங்கள், கடிதங்கள், அறிவியல் நூல்களை மொழி பெயர்த்து இருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வாரன்ட் என்ற ஆங்கில வார்த்தைக்கு சிறை ஓலை என்றும், ஓட்டு என்பதற்கு "வாக்கு சீட்டு" என்றும், அவ்வளவு ஏன் ?இன்று நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தி வரும் "வரவு செலவு திட்டம்" என்பதனையும் பாரதியார் தான் மொழிபெயர்த்துள்ளார். அதாவது "பட்ஜெட்" என்ற வார்த்தைக்கு "வரவு செலவு திட்டம்" என மொழிபெயர்த்தவர் பாரதியார்.

இதேபோன்று புரட்சி, பொதுவுடைமை உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதும் பாரதியாரே என தெரிவித்துள்ளார். இந்த  நிகழ்ச்சிகள் மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.