கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கும். அதிலும் ஏழாவது மாதம் வளைக்காப்பு செய்வது வழக்கம். ஏன் ஏழாவது மாதம் வளைகாப்பு செய்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழத்தான் செய்யும். அதற்கு பல்வேறு காரணங்களை நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 7 மாதத்திற்கு பிறகு கணவன்-மனைவி தாம்பத்யத்தில் ஈடுபட கூடாது என்பதற்காகவும் ஏழாவது மாதம் வளைக்காம்பு 

7 மாதத்திற்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் குழந்தைக்கு பிரச்சனை ஏற்படும். மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாக வாய்ப்பு உள்ளது என கருதி உள்ளனர். அடுத்ததாக கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பெண்கள் தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறோம் என்பதை காட்டவே பிள்ளைகளை பெற்ற அம்மாக்கள் வளைகாப்பிற்கு வந்து கர்ப்பிணி பெண்ணை வாழ்த்துவார்கள். வளைகாப்பில் அணிவிக்கப்படும் வளையல் ஓசை கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு பாடுவதாக இருக்கும்.அது குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும்.

ஏழு விதமான அறுசுவை உணவை கர்ப்பிணி பெண்ணுக்கு தந்து கருவில் வளரும் சிசுவிற்கும் தாய்க்கும் நல்ல ஊட்டச் சத்துக்களை கொடுத்து ஆரோக்கியமாக இருக்க வைப்பார்கள். சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு மனநலமும் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு எனும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

எனவே அதிலும் முக்கியமாக ஏழாவது மாதத்தில் இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள் சுகப்பிரசவம் மூலம் தாயும் சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது.

ஆனால் இன்றோ பெண்கள் சுகப்பிரசவம் என்றால் அச்சமடைகின்றனர். அதற்கு காரணம் சரியான அளவு உடல் வேலை இல்லை. உடலில் தெம்பும் இல்லை.  எனவே வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பதுதான் உண்மை.