அதிர்ச்சி: பிரியாணியில் ரத்ததுடன் பேண்டேஜ்..! நீங்கள் அடிக்கடி செல்லும் அதே கடையில் தான்..! 

தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் பரிமாறப்பட்ட பிரியாணியில் ரத்த கரையுடன் கூடிய பேண்டேஜ் கண்டெடுக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் கரூரில் உள்ள மிகவும் பிரபலமான திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் நிகழ்ந்து உள்ளது.

நேற்று கரூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் இந்த பிரியாணி கடைக்கு ஈரோட்டை சேர்ந்த கவின்குமார் என்ற நபர் அவருடைய நண்பருடன் சென்று பிரியாணி ஆர்டர் செய்து உள்ளார். அந்த உணவில் ரத்த கரையுடன் கூடிய பேண்டேஜ் இருப்பதை பார்த்து முகம் சுளித்து உடனடியாக ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு சரிவர யாரும் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.

மேலும் இதனால் கோபமடைந்த நவீன் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறையினர் ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஊழியர்கள் யாருக்காவது கையில் அடிபட்டு பேண்டேஜ் போடப்பட்டுள்ளதா? எப்படி பிரியாணியில் இந்த பேண்டேஜ் வந்தது என உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இருந்தபோதிலும் இதற்கு ஒரு முடிவு எட்டப்படாததால் ஒரு வார காலத்திற்குள் கடை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியாணி பிரியர்களுக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது கூடுதல் தகவல்.