ஆஹா...பேஷ் பேஷ்...! உணவகங்களில் பயன்பாட்டிற்கு வந்த வாழை இலை ..! 

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது.

இருந்தபோதிலும் பால் பாக்கெட் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கர்நாடகாவில் உள்ள உணவகம் ஒன்றில் வாழையிலையை தத்ரூபமாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலையை பயன்படுத்தும் விதத்தை பார்க்கும் போது அனைவரையும் வியக்க வைக்கிறது. இதுகுறித்த போட்டோ தொகுப்பு உங்களுக்காக....

மேல குறிப்பிட்டுள்ள இந்த போட்டோவை பார்க்கும் மக்கள் நாமும் இவ்வாறு பயன்படுத்தலாமே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இங்கு உள்ள உணவகங்களிலும் இதுபோன்று வாழை இலை பயன்பாடு வந்தால் நமக்கும் நல்லது. பிளாஸ்டிக் பொருட்களையும் ஒழிக்கலாம்... விவசாய பெருமக்களுக்கும் பேருதவியாக இருக்கும் என தொடர்ந்து கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.