முக்கனிகளில் ஒன்று வாழை பழம். வாழைப் பழம் நம் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தை படைக்கிறோம். திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு  சீர் வரிசையாகக் கொண்டு செல்வதும் வாழைப்பழங்கள் தான்.

அன்றே வாழைப் பழத்தின் மகிமையை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதுக்கு சாட்சி இது...

வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரை சத்து, இரும்புச்சத்து, டிப்தோப்பின், புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.

இவ்வளவு சத்துக்கள் கொண்ட அபூர்வ பழமாக வாழைப்பழம் இருக்கிறது. வாழைப்பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது. சமீபத்தில் ஓர் ஆய்வில் 2  வாழை பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகி உள்ளது. அதனால் தான் விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப்பழம் சாப்பிட்டு வரும் போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப் பழத்தில் உள்ள டிரிப்தோப்பின் என்றும் சத்து மன அழுத்தத்தை குறைத்து மனதை மிருதுவாக்குகிறது. இரும்புசத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினை தூண்டுகிறது. ரத்த சோகை வராமல் தடுக்கிறது. வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அது போல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகின.

மலச் சிக்கலுக்கு வாழைப்பழம் எடுத்திக்கொள்வது நல்ல தீர்வாக அமையும் புரோட்டீன் சத்தும், 2  மடங்கு அதிகமான புரோட்டீன் சத்தும் சத்தும்  , 3  மடங்கிற்கு அதிகமான பாஸ்பரஸ், 5  மடங்கு வைட்டமின் ஏ மற்றும் இருப்புச்சத்தும் உள்ளது. விலையும் ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு.