Asianet News TamilAsianet News Tamil

சோறு தண்ணி இல்லாமல் அம்மா உணவகத்தில் உண்ணும் முன்னாள் எம்பி யின் மகன்..! வெறும் 2 சட்டையுடன் தெருவில் வசிப்பதன் பயங்கர பின்னணி...!

சென்னை ஆதம்பாக்கத்தில் முன்னாள் திமுக எம்பி ஒருவரின் மகன் யாருடைய ஆதரவும் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

bala son of ex dmk mp struggling for his life in adampakkam bus stand
Author
Chennai, First Published Apr 12, 2019, 3:49 PM IST

சென்னை ஆதம்பாக்கத்தில் முன்னாள் திமுக எம்பி ஒருவரின் மகன் யாருடைய ஆதரவும் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் சாதாரண வார்டு மெம்பர் கூட அதிக பண வசதியுடன் வாழ்க்கை நடத்துகின்றனர். அதற்கு பின்னணியில் ஊழல் முதல் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க முன்னாள் எம்பியான எஸ் கே சம்பந்தன், 1967 ஆம் ஆண்டு திருத்தணி தொகுதி திமுக எம்பி ஆகப் தேர்வானவர்.

அதற்கு முன்னதாக காங்கிரஸில் இவர் இருந்தார். இவருடைய மகன்தான் பாலு வயது 65. இன்று இந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நபர் இவர்தான். தற்போது இவர் ஆதம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரண்டு அழுக்கு சட்டை உடன் தெருவில் வசித்து வருகிறார். உண்ண உணவும் இல்லாமல் தங்க இடமும் இல்லாமல் தொடர் அவதிப்பட்டு வருகிறார். 

bala son of ex dmk mp struggling for his life in adampakkam bus stand

இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது, "நாங்கள் முன்பு ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்தோம். குறிஞ்சிப்பாடி என்ற இடத்தில் எங்களுக்கு சொந்தமாக ரைஸ்மில் இருந்தது. எனது தந்தை எம்பி பதவியில் இருந்தார். ஆனால் அரசியல் மூலம் எதையும் சம்பாதிக்கவில்லை. அதையும் மீறி சொந்த பணத்தை கட்சிக்காக செலவிட்டுள்ளார். அவர் எம்பியாக இருந்தபோது எத்தனையோ தொழிலதிபர்கள் அவரை பார்க்க வீட்டிற்கு வருவார்கள் .ஆனால் அவர் எதிர்க்கும் தலை அசைந்து கொடுக்க மாட்டார். நேர்மையாக இருந்தார்.

அப்போது பல முறை என் அப்பாவுடன் டெல்லிக்கு சென்று உள்ளேன். அவருக்கு கார் டிரைவராக கூடவே இருந்து உதவி செய்து உள்ளேன்.
1971இல் கருணாநிதி திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது அப்பாவிற்கு பிடிக்கவில்லை. அப்போது ஏற்பட்ட மன சங்கடத்தை அடுத்து திமுகவிலிருந்து வெளியேறினார். மேலும் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கியபோது அப்பாவை அழைத்து மந்திரி பதவி கொடுப்பதாக சொன்னார். இருந்தாலும் அதிலும் விருப்பமில்லை என்பதால் அந்த கட்சியிலும் இணையவில்லை.

பின்னர் தான் நாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது. எங்களுடைய ரைஸ் மில்லும் மூடப்பட்டது. எனக்கு தெரிந்த டிரைவர் தொழில் செய்து வாழ்ந்து வந்தேன். எனக்கு ஒரு குடும்பம் இருந்தது. இதற்கிடையில் பக்கவாதத்தால் நான் உடலளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு எந்த உதவியையும் என் குடும்பத்திற்கு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் பணம் இல்லாததால் உறவினர்களும் குடும்பத்தினரும் என்னை விட்டு சென்று விட்டனர். வேறு வழி இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்தேன். தற்போது அந்த இல்லம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதால் உடலளவில் பாதிக்கப்பட்டுள்ள என்னை அந்த இடத்திற்கு அழைத்து செல்ல மறுத்து விட்டனர். இந்நிலையில் ஆதம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசித்து வருகிறேன். எனக்கு பசிக்கும் போதெல்லாம் அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று வயிறார உண்டு வருகிறேன் என மிகுந்த வலியுடன் அவருடைய வருத்தத்தை தெரிவித்து உள்ளதாக பிரபல நாளிதழ்களில் தகவல் வெளியாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios