காரமான, பொறித்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில்...!சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்பு தெரியுமா?
காலை உணவில் போது சப்பிடவே கூடாத உணவுகள் என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
காலை உணவில் போது சப்பிடவே கூடாத உணவுகள் என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம். காலை எழுந்தவுடன், நம் வயிறு காலியாக இருக்கும், அத்தகைய சூழ்நிலையில், நாம் சில உணவுகளை மறந்து கூட சாப்பிடுவது,நமக்கு பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகிக்கிறது. ஏனெனில், காலையில் நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இது நாளடைவில் வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை பார்க்கலாம்.
காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவுகள்:
இவை காலை வேளையில் எடுத்து கொள்வது , வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனுடன், நீங்கள் வயிறு மற்றும் மார்பில் நீங்கள் அசௌகரியத்தை உணரலாம்.
நார்ச்சத்து உணவுகள்:
நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது. ஆனால் அதிக நார்ச்சத்து வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்று வலி போன்ற சிக்கலகளை ஏற்படுத்தும். எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சீரான, சரியான அளவில் உண்ணுங்கள்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. அவை சர்க்கரையைக் கொண்டிருக்கின்றன மற்றும் இயற்கையில் அமிலத்தன்மை கொண்டவை, எனவே, குடலுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். வாழைப்பழங்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பது உங்களுக்கு மயக்கத்தையும் ஆற்றலையும் உண்டாக்கும். வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உட்கொள்வது இரத்தத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் ஏற்றத்தாழ்வுக்கும் வழிவகுக்கும். இது இதயத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
வெறும் வயிற்றில் தேநீர்:
சிலர் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் உங்களுக்கு நெஞ் செரிச்சல் மற்றும் நீரிழப்பு பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஐஸ்வாட்டர்:
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்கக்கூடாது. இதன் காரணமாக உங்கள் செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது.
ஆல்கஹால் ஏற்படுத்தும் பாதிப்பு:
இது உங்கள் கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு, ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது.
தயிர்:
தயிர் எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல உணவாக கருதாம் தயிரை உட்கொள்வது நல்லது, ஆனால் வெறும் வயிற்றில் இல்லை. தயிர் அல்லது எந்த புளித்த பால் தயாரிப்பு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது, இது நல்ல பாக்டீரியாக்களைக் கொல்லும். இது உடலில் அமிலத்தன்மை மற்றும் வாய்வுக்கு வழிவகுக்கிறது. எனவே, தயிரை நாம் காலையில் உட்கொள்ளும் முதல் விஷயமாக இருந்தால் முழுமையான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியாது.
இனிப்பு வகைகள்:
வெறும் வயிற்றில் சர்க்கரை பொருட்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது உடலுக்குள் இன்சுலின் உற்பத்தியை நிச்சயமாக பாதிக்கும் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். அதிகப்படியான சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது மற்றும் கலோரிகள் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்காது. எனவே, மேற்சொன்ன உணவுகளை காலை வேளையில் தவிர்ப்பது நல்லது.