Asianet News TamilAsianet News Tamil

வெயிலை சமாளிக்க ஆட்டோவின் மேற்புறத்தில் பூந்தோட்டம்..! ஜில் ஜில் காற்றுடன் உற்சாகம்..!

கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரிக்ஷாவின் மேற்பகுதியில் அழகான சிறிய தோட்டம் அமைத்து வளர்த்து வருகிறார்.

auto driver made plants on the top of the auto
Author
Chennai, First Published Apr 3, 2019, 6:47 PM IST

கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரிக்ஷாவின் மேற்பகுதியில் அழகான சிறிய தோட்டம் அமைத்து வளர்த்து வருகிறார்.

கொல்கத்தாவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் நபர் பிஜோய் பால்.இவர் மரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "மரங்களை பாதுகாத்து உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்ற பொன்மொழியை தன்னுடைய ஆட்டோவில் பின் பக்கமாக எழுதி வைத்தும், ஆட்டோவின் மேற்புறத்தில், அசந்து போகும் அளவிற்கு சிறிய செடிகளை வளர்த்து அழகிய பூந்தோட்டமாக வைத்துள்ளார்.

auto driver made plants on the top of the auto

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது,"எங்கு சென்றாலும் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது என்றும்,எவ்வளவு வெயில் அடித்தாலும் அதிலிருந்து மிக எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும்.. அதேவேளையில் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

auto driver made plants on the top of the auto

மேலும் இதை ஒரு விளம்பரமாக கருதாமல் பசுமை ஆர்வலர்கள் உருவாக வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் மரங்களை அழிக்காமல் ஒவ்வொருவரும் மரத்தை பேணிக்காக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளேன்" என அவர் தெரிவித்து உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios