ஆட்டோ ஓட்டும் போது நெஞ்சு வலி..! பள்ளி மாணவிகளை காப்பாற்றிய பின் உயிர் விட்ட டிரைவர்..! 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வந்தவர் ஆட்டோ டிரைவர் ராமலிங்கம். இவருக்கு வயது 54. இவர் வழக்கமாக அப்பகுதியிலுள்ள பள்ளி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி சென்று பள்ளியில் விடுவதும் மீண்டும் பள்ளி நேரம் முடிந்த உடன் அவர்களை அழைத்து வந்து வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவதும்  வேலையாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் பள்ளி மாணவிகளை ஏற்றிக்கொண்டு வரும்போதே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது தன்னுடைய உடல் நிலையில் ஏதோ மாற்றம் இருப்பதை உணர்ந்தும்... வலி தாங்க முடியாமல் தவித்து வந்ததையும் பொருட்படுத்தி பாதுகாப்பாக பள்ளி மாணவிகளை வேறு ஆட்டோவில் ஏற்றி அனுப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் வழியாக வேறு யாரும் இல்லாத காரணத்தினால் மீண்டும் நெஞ்சு வலியோடு ஆட்டோவை இயக்கி உள்ளார்.

அப்போது தூத்துக்குடி கீழரத வீதியில் ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது நெஞ்சு வலி அதிகமாகி உள்ளத அந்த வலியோடு தன் நெஞ்சின் மீது கை வைத்தே ஆட்டோவை ஓரமாக நிறுத்தியுள்ளார். நிறுத்தின வேகத்தில் மயங்கியும் கீழே விழுந்துள்ளார். இதைக்கண்டு பதற்றமடைந்த மாணவிகள் அருகில் உள்ளவர்களை உதவிக்காக அழைத்து உள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே பள்ளிக்குழந்தைகள் துக்கம் தாங்காமல் அழுது துடித்தன.

பின்னர் பெற்றோர்கள் பள்ளி குழந்தைகளை அவரவர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனாலும் அவ்வளவு வலியிலும் எங்களை காப்பாற்றுவதற்காகவே வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆட்டோ ஓட்டி வந்த டிரைவரை நினைத்து மனவேதனையை கொட்டி தீர்த்து வருகின்றனர் மாணவிகள் மற்றும் இவருடைய இறப்பு பேரிழப்பாக கருதி அப்பகுதி மக்கள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர்.