இந்தியா உலக கோப்பை வென்றால்... இப்படி ஒரு சேவையா..? ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்ட ஆட்டோ ஓட்டுநர்..!

நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அடுத்து வரும்10 நாட்களுக்கு தன் ஆட்டோவில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தீவிர கிரிக்கெட் ரசிகரும், ஆட்டோ ஓட்டுநருமான அனில் குமார் தெரிவித்து உள்ளார். 

சண்டிகரில் வசித்து வரும் அனில் ஆட்டோ ஓட்டுநர் அனில் குமார் தான், இந்த வித்தியாசனமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இது குறித்து அனில் குமார் தெரிவிக்கும் போது....

நாட்டுக்காக தான் நான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன்.. அதுமட்டுமல்லாமல் இந்த உலக கோப்பையுடன் தோனி வெளியேறி விடுவார். எனவே இந்த உலக கோப்பைஇந்தியாவிற்கு கிடைத்தால், இந்த உலக கோப்பை கப்புடன் தோனி விடைபெறுவதாக இருக்கும் என தெரிவித்து உள்ளார். கிரிக்கெட் மீது அலாதி பிரியம் கொண்ட ஆட்டோ ஓட்டுனரின் இந்த அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.