பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! 31 ஆம் தேதி அத்தி வரதர் தரிசன நேரம் குறைப்பு..! 

ஆகஸ்ட் 31ஆம் தேதி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் அத்திவரதரை அரைநாள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அத்தி வரதரை நின்ற கோலத்தில் வைக்கப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துக் கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதி களிலும் பக்தர்கள் மாலை 5 மணி வரையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது கூடுதல் தகவல்.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தரிசனம் முடித்துவிட்டு திருவீதிபள்ளம் வழியாக வாகன நிறுத்தும் இடத்தை அடையவும் ஒரு வழி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சயன கோலத்தில்... அதாவது படுத்தவாறு அத்திவரதர் தற்போது தரிசனம் கொடுத்து வருகிறார். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் தரிசனம் கொடுக்க உள்ளதால் அவரை காண பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க கூடும். 

எனவே கூட்ட நெரிசலை தடுக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது அறநிலையத்துறை. இதன் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தின் ஒரு சில இடங்களில் பக்தர்களை நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் தரிசனத்திற்கு உள்ளே அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் மூன்று லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

31 ஆம் தேதி தரிசனம் குறித்த முழு விவரம் இதோ..! 

31.07.19 மாலை  5.00 to 6.00 மணிக்கு  சகஸ்ரநாமம்  அனுமதி பெற்றவர்கள், 31.07.19 காலை 7.30 to 8.30 மணிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.புதன் கிழமை மட்டும் காலை மாலை 5.00 to 6.00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறாது. 

31.07.19 புதன் கிழமை மட்டும் நன்பகல் 12.00 மணிக்கு (கிழக்கு ராஜகோபுரத்தில் )பொது தரிசன  சேவை  நிறுத்தப்படும்.

ரூ.300 கட்டணத்தில், ஆன்லைன் பதிவு செய்த  சேவாரத்திகள் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி  வரையிலான ஆன்லைன் கட்டண சேவை 31.07.2019 மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் தரிசனத்திற்கு உரிய ஆவணங்களுடன் வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறது.(31.07.19 புதன்கிழமை மட்டும் அனுமதி இல்லை). DONAR PASS & VIP PASS அனுமதி 31.07.19 புதன்கிழமை மட்டும் பிற்பகல் 3.00 மணியுடன் நிறுத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.