அத்தி வரதரரை காண செல்லும் முன்.. இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!

நாளுக்கு நாள் அத்தி வரதரை காண பக்தர்கள் கூட்டம் அதிகரிக்து வருவதால், தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதிகாலை, 4.30  மணிக்கு கிழக்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு இருக்கும்.. அவ்வழியாக உள்சென்று காலை 5 மணி முதல் சாமி தரிசனம் செய்ய முடியும் 

அதன் பின், கிழக்கு கோபுர வாசல் 9.30 மணிக்கு மூடப்பட்டு, இரவு 10  மணி வரை பொதுமக்கள் தரிசனம்  செய்யலாம். ஜூலை 1 முதல் தொடங்கிய அத்தி வரதர் தரிசனத்தை காண நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து  வருகின்றனர். 

நேற்று வரையிலான, உற்சவம் தொடங்கிய 8 நாட்களில் 8 லட்சத்து 86 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.