தங்கும் அறை எடுக்கவும் கட்டாயமாகிறது ஆதார் அட்டை ......!!!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் பெற ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பதி சென்றாலே, அங்கு ஒரு நாளாவது தங்கி, சாமி தரிசனம் செய்வது தான் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் , திருப்தியில் தங்குவதற்கு ஏதுவாக , பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பக்தர்களுக்காகவே பல அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.......
இந்நிலையில், இவ்வாறு தங்க வரும் பக்தர்கள், கண்டிப்பாக, அவர்களுடைய ஆதார் கார்டை காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், விடுதி அறைகளுக்கு முன்பணம் செலுத்துவது ரத்து செய்யப்பட்ட தகவலையும், ஆதார் கட்டாயம் என்பதை வலியுறுத்தியும், திருமலையில் உள்ள விடுதி அறைகளின் நிலவரங்களையும் பக்தர்களுக்குத் தெரியப்படுத்த அதிகாரிகள் குழு, தகவல் ஒளிர் பலகைகளை தயார் செய்துள்ளதாக , தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
