பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த தலைவரும் வர வேண்டாம்! 1 வயது குழந்தை மட்டும் வந்தால் போதும்..! கெஜ்ரிவால் அதிரடி..! 

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இரண்டு இடங்களை பிடித்து நாளை மறுதினம் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இவருடைய பதவி ஏற்பு விழாவில் மற்ற அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவிக்கும்போது, "டெல்லியில் முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்பது டெல்லி கான ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. எனவே மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் முதல்-மந்திரி களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது அவ்யன் தோமர் என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு கெஜ்ரிவால் வேடமிட்டு ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திற்கு பெற்றோர் வந்திருந்தனர்.பலரது கவனத்தையும் ஈர்த்த அக்குழந்தையின் புகைப்படம் இணையத்திலும் வைரல் ஆனது. 

ஆனால் நீண்ட நேரமாகியும் கெஜ்ரிவால் அங்கு வராததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த நிலையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நாளை மறுதினம் பதவியேற்கவுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக பேபி மப்ளர் மேன் அழைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது