ஓய்வூதிய தொகை முழுவதும் ஊழியர்களுக்கே வழங்குங்கள்..! அருண் ஜெட்லியின் விருப்பத்தை நிறைவேற்றிய மனைவி...! 

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் ஓய்வூதியம் அனைத்தையும் மாநிலங்களவையில் குறைவான ஊதியம் பெறும் 4 ம் நிலை ஊழியர்களுக்கு வழங்குங்கள் என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். 

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட்  9 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்ஜெட்லி ஆகஸ்ட் 24 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் இழப்பு பாஜகவினர் மட்டுமின்றி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அருண் ஜெட்லியின் உயிரிழப்பிற்கு பின் மாதந்தோறும் அவருக்கு வழங்க வேண்டிய பென்ஷன் தொகையை அவருடைய மனைவிக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் அவருடைய குடும்பம் இதனை ஏற்க மறுத்தது.

அதற்கு பதிலாக, குறைந்த ஊதியத்தில், பணத்தேவை அதிகமாக உள்ள ஊழியர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அருண் ஜேட்லியின் மனைவி சங்கீதா ஜெட்லி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "மறைந்த மாநிலங்களவை உறுப்பினர் அருண் ஜெட்லியின் மனைவி என்ற முறையில் எனக்கு ஓய்வூதியம் வழங்குவதாக இருக்கிறது. அதனை மக்களவை ஊழியர் நல நிதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

20 வருடங்களுக்கு மேலாக மக்களவையில் உறுப்பினராக இருந்தவர் அருண் ஜெட்லி. அப்போதிலிருந்தே பணியில் இருந்த மாநிலங்களவையில் குறைவான ஊதியம் பெறும் 4 ம் நிலை ஊழியர்களுக்கு வழங்குங்கள். காரணம்... அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்காக அருண் ஜெட்லீ சில முயற்சி எடுத்து இருந்தார்.. எனவே மாதம் கிடைக்க வேண்டிய 25 ஆயிரம் ரூபாயை அவர்களுக்கே கொடுத்து விடுங்கள் என தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.