Are you using more more tablets - just read the impact of that

வலி நிவாரண மாத்திரைகளை அதிகம் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்டெராய்டல் அல்லாத ( non-steroidal) அழற்சிக்குரிய மருந்துகள் (NSAID) வலி மற்றும் அழற்சி மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, இதய பாதிப்பு அளவை 20 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பி.ஜே.ஜே பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், NSAID -களான Ibuprofen, Diclofenac, Celecoxib மற்றும் Naproxen போன்றவற்றை - ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு மேலாக எடுத்துக்கொள்வது மாரடைப்பு ஆபத்தோடு தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை அதிக டோஸ்களாக தொடர்ந்து ஒரு மாதத்திற்கு எடுத்துக்கொள்வது முற்றிலும் ஆபத்திற்கு வழிவகுக்கிறது.

ஆராய்ச்சியாளர்களின் திட்டமிட்ட ஆய்வு மற்றும் ஒரு மெட்டா பகுப்பாய்வு ஆனது 446,763 மக்களில் 61,460 பேர் இந்த மருந்துகளின் தொடர் நுகர்வால் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

மிலானோ-பிக்கோஸ்கா பல்கலைக்கழகத்தின் முந்தைய ஆய்வின் படி, அதிகமாக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் மற்றும் தாமாகவே வாங்கி சாப்பிடும் பல வலி நிவாரண மருந்துகளால், அதிகப்படியானோர் இருதய மருத்துவமனைகளை நாடுவதாக தெரிவித்துள்ளது.